tamilnadu

img

கட்டுமானத் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாத்திடுக

கட்டுமானத் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாத்திடுக

கட்டிடத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

சேலம், ஜூலை 6- மூலப்பொருட்களின் விலை களை குறைத்து, கட்டுமானத் தொழி லையும் தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும், என சிஐடியு  கட்டிடத் தொழிலாளர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. சிஐடியு சேலம் ஜில்லா கட்டிடத்  தொழிலாளர் சங்க 11 ஆவது ஆண்டு பேரவை வி.பி.சிந்தன்  நினைவகத்தில் ஞாயிறன்று, சங்கத் தின் மாவட்ட துணைத்தலைவர் ஆர்.கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் கே.எஸ்.பழனிசாமி சங் கத்தின் கொடியை ஏற்றி வைத் தார். துணைச்செயலாளர் ஏ.சீனி வாசன் வரவேற்றார். மாநில சிறப்புத்தலைவர் ஆர்.சிங்கார வேல் மாநாட்டை துவக்கி வைத்து  உரையாற்றினார். மாவட்டச் செய லாளர் சி.கருப்பண்ணன், மாவட் டப் பொருளாளர் சி.மோகன் ஆகி யோர் அறிக்கைகளை முன்வைத்த னர். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந்தன், சாலை போக்கு வரத்து சங்க மாநில துணைத்தலை வர் எஸ்.கே.தியாகராஜன், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் பி.பன் னீர்செல்வம், மாவட்டப் பொருளா ளர் இளங்கோ, மாநிலக்குழு உறுப் பினர் பி.விஜயலட்சுமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இக்கூட்டத்தில், கட்டுமானப் பெண் தொழிலாளர்களுக்கு ரூ.3  ஆயிரம் ஓய்வூதியம், 55 வயதிலி ருந்து வழங்க வேண்டும். இறுதி புதுப்பித்தல் தவறியவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம்,  பொங்கல் தொகுப்பு வழங்க வேண் டும். வீட்டுமனை பெறுவதில் உள்ள நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும். நலவாரியத்திலுள்ள தொழிலாளர்களின் குழந்தை களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல்  கல்வி உதவித்தொகை வழங்க  வேண்டும். இஎஸ்ஐ திட்டத்தை அம லாக்க வேண்டும். மூலப்பொருட் களின் விலைகளை குறைத்து, கட்டு மானத் தொழிலையும் தொழி லாளர்களையும் பாதுகாக்க வேண் டும். சேலம் மாவட்ட கட்டுமான நல வாரிய சமூகப் பாதுகாப்பு திட்ட அலு வலகத்தில் பணப்பயன் மற்றும் நலத்திட்ட உதவி வழங்குவதில் சில  சங்கங்களுக்கு முன்னுரிமை வழங் கும் பாரபட்சமான போக்கை கைவிட்டு அனைத்து சங்கங்களுக் கும் சமமாக வழங்க வேண்டும். கட் டுமான நலவாரிய கூட்ட முடிவுக ளுக்கும், தமிழக சட்டமன்ற அறி விப்புகளுக்கும் அரசாணை வெளி யிட வேண்டும், உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின்  சேலம் மாவட்டத் தலைவராக சி. மோகன், மாவட்டச் செயலாளராக சி.கருப்பண்ணன், மாவட்டப் பொருளாளராக சி.முருகன் உட்பட 29 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ஆர். வெங்கடபதி நிறைவுரையாற்றி னார்.