அக்.31இல் திருப்பூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
திருப்பூர், அக்.28 – திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையம் மூலம் அக்டோபர் 31 வெள்ளியன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆட்சியர் அலுவலக அறை எண்.439 இல் உள்ள வேலை வாய்ப்பு மைய அலுலலகத்தில் இம் முகாம் நடைபெறும். திருப்பூர் மாவட் டத்தை சார்ந்த தனியார் நிறுவனங் கள் ஆட்களை எடுக்கின்றனர். தேர்வு செய்யப்படுவோருக்கு முகாம் நாளில் பணி நியமன ஆணை வழங் கப்படும். 10 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் பட் டப்படிப்பு படித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமில் கலந்து கொள்வோர் தங்கள் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுய தகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம். வேலை வழங்கும் நிறுவ னத்தினரும், வேலை கோருவோ ரும் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற தமிழ்நாடு தனி யார்துறை வேலை இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண் டும். கூடுதல் விவரங்களுக்கு 9499055 944 என்ற எண்ணை தொடர்பு கொள்ள லாம் என ஆட்சியர் மனிஷ் நாரண வரே தெரிவித்துள்ளார்.