மலக்குழி மரணங்களை தடுத்திடுக
கோவை, ஜூலை 21- தமிழகம் முழுவதும் நடை பெறும் மலக்குழி மரணங்களை தடுக்க தமிழக அரசு தீவிர நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் கோவை மாவட்ட மாநாடு வலி யுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5 ஆவது கோவை மாவட்ட மாநாடு ஞாயிறன்று கண பதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தோழர் யு.கே.சிவ ஞானம் நினைவரங்கில் நடைபெற் றது. மாவட்ட துணைத் தலைவர் கே.ரத்தினகுமார் தலைமை வகித் தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோவை வடக்கு நகரக் குழு செயலாளர் எஸ்.நாராயணசாமி வரவேற்றார். தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாநில சிறப்புத் தலைவர் எஸ்.கே. மகேந்தி ரன் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ரா.ஆறுச் சாமி செயல்பாட்டு அறிக்கையும், மாவட்டப் பொருளாளர் ஆர்.மகேஸ்வரன் வரவு செலவு அறிக் கையும் சமர்ப்பித்தனர். திராவிட தமிழர் கட்சி தலைவர் வெண்மணி வாழ்த்திப் பேசினார். இதில், தனியார் துறை வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அமுல் படுத்தும் மசோதாவை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் நிறை வேற்ற வேண்டும். தமிழகம் முழு வதும் நடைபெறும் மலக்குழி மர ணங்களை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண் டும். கோவை மாநகரில் சட்ட மேதை அம்பேத்கர் சிலை அமைக்க மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி அவரது சிலையை நிறுவ வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. இம்மாநாட்டில், பொள் ளாச்சி பாலியல் வழக்கில் நீதிக் காக போராடிய மாதர் சங்க, வாலி பர் சங்க, மாணவர் சங்க தோழர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை படைப்புகளாக்கிய, எழுத்தாளர்கள் சக்தி சூர்யா, வே. பிரசாந்த் மற்றும் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் 12 ஆம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்ற பழங்குடியின மாணவி காயத்திரி ஆகியோர் கௌரவிக் கப்பட்டனர். மாநாட்டில், மாவட்டத் தலை வராக ஆர்.மகேஸ்வரன், மாவட்டச் செயலாளராக த.நாகராஜ், மாவட் டப் பொருளாளராக சுப்ரமணியம் உள்ளிட்ட 31 பேர் கொண்ட மாவட் டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநில துணைத்தலைவர் பி. சுகந்தி நிறைவுரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் தினேஷ் ராஜா நன்றி கூறினார்.