50 ஆண்டு காலமாக சாலை வசதி இல்லை!
உதகை, ஆக.11- 50 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாத அம்பாள் காலனிக்கு உடனடியாக சாலை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் ஆட் சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் திங்களன்று நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தில், கீழ் கோத்தகிரி அம்பாள் காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு வில், அம்பாள் காலனியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 50 வருடங்களாக வசித்து வருகிறோம். கிராமத்திற்கு தேவை யான நடைபாதை, தடுப்புச்சுவர் உள்ளிட்ட வசதிகள் எல்லாம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட் டுள்ளது. ஆனால், எங்கள் கிராமத்திற்கு இது வரை சாலை வசதி இல்லை. கடந்த 2 வரு டங்களாக அதிகாரிகளும் கூறி வருகி றோம். ஆனால், அரசு அனுமதி கிடைக்க வில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் சாலை வசதி இல்லாததால் மிகவும் சிரமமாக உள்ளது. அவசர தேவைக்கு ஆம்பு லன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் செல்ல முடியவில்லை. இதனால் உடல்நிலை பாதிப் படைந்தவர்களை தொட்டில் கட்டி தூக்கி செல்கிறோம். இதுபோன்ற காரணங்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே விரைந்து சாலை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பன்னாட்டு நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைப்பு
ஈரோடு, ஆக.11- பெருந்துறை சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனத்தில், பெருந்துறை செயின்ட் கோபைன் தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்டது. ஈரோடு தோழர் டி.பி.முத்துசாமி நினைவகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எச்.ஸ்ரீராம் சிறப்புரையாற்றினார். பெருந்துறை பொதுத்தொழிலாளர் சங்க தலைவர் ஜி.பழனிசாமி வாழ்த்தி பேசினார். பெருந்துறையில் பல்நோக்கு வசதிகளுடன் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க வேண்டும். வேலைக்குச் செல்லும் ஆண்கள் வசதிக்காக பெருந்துறையில் தங்கும் விடுதி அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து சங்கத்தின் தலைவராக எஸ்.சுப்ரமணியன், செயலாளராக எஸ்.சுரேந்திரன், பொருளாளராக ஏ.தமிழரசு, துணைத்தலைவர்களாக ஜெயபால், தினேஷ்குமார், துணைச்செயலாளர்களாக மாரீஸ்வரன், கோவிந்தராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.