பிளாஸ்டிக் கழிவு மூலம் மின்சார உற்பத்தி திட்டம்
கோவை, ஆக.24- ரூ.250 கோடி மதிப்பில் பிளாஸ் டிக் கழிவுகள் மூலம் மின்சாரம் உற் பத்தி செய்யும் திட்டத்தை கோவை யில் துவங்கவுள்ளோம் என அமைச் சர் கே.என்.நேரு தெரிவித்துள் ளார். கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் செம்மொழிப் பூங்கா வளாகத்தில், நகராட்சி நிர் வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஞாயிறன்று ஆய்வு செய்து செய்தார். இதன்பின் அவர் செய்தி யாளர்களிடம் பேசுகையில், செம் மொழி பூங்காவிற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியை காட்டிலும் கூடுதலாக ரூ.50 கோடி வேண்டும் என கோரப்பட்டுள்ளது. முதல மைச்சரின் அறிவுரையை பெற்று அந்த நிதியை ஒதுக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. வெள்ள லூர் குப்பைக்கிடங்கு பகுதியில் ரூ.70 கோடி செலவில் இயற்கை எரிவாயு முறையில் சுத்தம் செய்வ தற்கான நடவடிக்கைகள் துவங்கப் படவுள்ளது. மேலும், கோவையில் ரூ.250 கோடி மதிப்பில் பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை துவங்கவுள் ளோம். மேலும், புதிதாக எந்த வரி யையும் உயர்த்தவில்லை, என் றார். இந்நிகழ்வில், நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.மதுசூதன ரெட்டி, ஆட்சியர் பவன்குமார், கே.ஈஸ்வர சாமி எம்.பி., மேயர் கா.ரங்கநாயகி, ஆணையர் மா.சிவகுரு பிரபாக ரன், துணை மேயர் ரா.வெற்றிச் செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.