கோவையில் வலிமை திரைப்படம் வெளியான திரையரங்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்த வலிமை திரைப்படம் இன்று காலை வெளியிடப்பட்டது. அதிகாலையிலேயே ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது.
இந்நிலையில் கோவையில் 100 அடி சாலையில் உள்ள கங்கா திரையரங்கம் முன் இன்று அதிகாலை 5 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். பெட்ரோல் குண்டு இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்ட பகுதியில் விழுந்து வெடித்தது. இதில் ஒரு இருசக்கர வாகனம் லேசான சேதம் அடைந்தது.அங்கு நின்று கொண்டு இருந்த ராமச்சந்திரன் என்பவருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் கோவையில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.