காவிரி ஆற்றை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கிய மக்கள்!
நாமக்கல், ஜூலை 10- காவிரி ஆற்றை பாதுகாக்கும் வகையில், பள்ளிபாளையம் பகுதி வழியாக பாயும் ஆற்றில் படர்ந் துள்ள ஆகாயத்தாமரைகளை அகற் றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட் டுள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள மேட் டூர் அணையிலிருந்து பாசனத்திற் காக காவிரி ஆற்றில் வெளியேறும் தண்ணீர், நாமக்கல், ஈரோடு வழி யாக டெல்டா மாவட்டங்களை சென் றடைகிறது. இந்நிலையில், நாமக் கல் மாவட்டத்தின் பள்ளிபாளை யம் பகுதி வழியாக பாயும் காவிரி ஆற்றில் சுமார் 6 கிலோ மீட்டர் தூரத் திற்கு ஆக்கிரமித்த ஆகாயத்தா மரை செடிகள், தண்ணீரில் அடித் துச் சென்று பல்வேறு பகுதிகளி லும் உள்ள படித்துறைகளில் தேங் கியுள்ளது. இதனால் பொதுமக்கள் ஆற்றுநீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும், கதவணைகளில் மின்சாரம் உற் பத்தி செய்வதிலும் அவ்வப்போது பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாம ரைகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தியும், இதுவரை அதிகா ரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆற்றங்கரை யோரம் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளில் மாலை நேரத்தில் பாம்பு உள்ளிட்ட விஷ உயிரினங்கள் அதி கமாக படையெடுத்து வருகின்ற னர். மேலும், அதிகளவு சூழ்ந்துள்ள ஆகாயத்தாமரை மற்றும் கழிவுநீ ரால் துர்நாற்றம் வீசுவதால், முதி யோர்கள் மற்றும் குழந்தைகள் அதி களவில் பாதிப்புக்குள்ளாகி வருவ தாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டி னர். இந்நிலையில், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து கடந்த ஒரு வாரமாக காவிரி ஆற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தா மரை செடிகளை அகற்றும் பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். பொது மக்கள் தங்களது அன்றாடப் பணி களை விட்டு, ஆகாயத்தாமரை களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதால், பணியை செய்யத் தவ றிய துறை சார்ந்த அதிகாரிகளின் சம்பளத்தில் பிடித்தம் செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், காவிரி ஆற்றை சுத்தப் படுத்தும் இவர்களின் பணி பலரா லும் பாராட்டப்பட்டு வருகிறது.