20 ஆண்டுகளாக மின் இணைப்பின்றி தவிக்கும் மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார்
திருப்பூர், செப்.15 - தாராபுரம் அருகே சின்னக்காம்பாளை யம் புது காலனி பகுதியில் 20 ஆண்டுகளாக மின் வசதி இன்றி தவித்து வருவதாகவும், உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என 100க்கும் மேற்பட்ட மக்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மாவட்ட ஆட் சியரிடம் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்களன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், சின்னக்காம்பாளை யம் பகுதி மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சின் னக்காம்பாளையம் பேரூராட்சி, காங்கயம் பாளையம் கிராமத்தில் கடந்த 2002 ஆம் ஆண் டில் க.ச.எண் 586 ல் அமைந்துள்ள இடத்தை 210 வீட்டு மனையிடங்களாக பிரித்து பிற்ப டுத்தப்பட்ட வகுப்பினருக்கு தமிழக அரசு இல வச வீட்டுமனைப்பட்டா வழங்கியது. பட்டா பெற்றுக்கொண்டு அந்த இடத்திற்கு புது காலனி என்று பெயரிட்டு மக்கள் குடியி ருந்து வருகின்றனர். இங்குள்ள 210 வீட்டு மனைப்பட்டாக்களில் தற்போது 100 குடும் பங்கள் வீடு கட்டி குடியிருந்து வருகின்ற னர். இந்த வீடுகளில் கடந்த 20 ஆண்டுகளாக மின் வசதி இல்லை. மண்ணெண்ணெய் விளக்கு, பேட்டரி உள்ளிட்டவைகள் வைத்து சமாளித்து வருகிறோம். மின் வசதி இன்றி குழந்தைகளை வைத்துள்ளவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், இலவச மனை பட்டா பெற்றுள்ள மற்றவர்கள் வீடு கட்ட வசதி யின்றி காலி இடமாக வைத்துள்ளனர். வீடு இல்லாதவர்களுக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் வீடு கட்ட ஆவன செய்ய வேண்டும். மின் இணைப்பு இல்லாத வீட் டுக்கு மின் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். சாலை வசதி, சாக்கடை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி களை செய்து தர வேண்டும் என கூறினர். 25 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கும் அவலம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொங்குபாளையம் கிளைச் செயலாளர் குமா ரவடிவேல் மற்றும் எஸ்.அப்புசாமி ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, பர மசிவம்பாளையம், பொங்குபாளையம் ஆகிய பகுதிகளில் 25 நாட்களுக்கு ஒரு முறை கூட தண்ணீர் விடுவதில்லை. குழாய் உடைப்பு என பல்வேறு காரணங்கள் கூறுகின் றனர். இந்த ஊராட்சிக்கு திட்டப்படி 2 லட்சத்து 84 ஆயிரம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுவ தாக குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். ஆழ்குழாய் கிணறுகளில் உப்பு நீராக உள்ளதால், இப்பகுதி மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். 4 ஆவது குடிநீர் திட்டத்தில் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஊராட்சி மன்ற அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப டுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீட்டில் வேலை வழங்க கோரிக்கை: கல்பனா என்பவர் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது, சந்தைபாளையம் பகுதியில் வசித்து வரும் 35 வயதான தனக்கு. தாய் தந்தை இல்லை. கணவர் இறந்து 5 ஆண்டு கள் ஆகிறது. 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. 4 ஆம் வகுப்பு படிக்கும்போது விபத் தில் தனது இடது கையை இழந்ததாகவும், 9 ஆம் வகுப்பு வரை படித்துள்ளதாகவும் தெரி வித்தார். மாற்றுத்திறனாளியான தனக்கு, தன் குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாற்றுத்திறனாளி இட ஒதுக் கீட்டில் வேலை வழங்க ஆவன செய்ய வேண் டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார். கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் சேர்க்க விண்ணப்பம்: இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மாவட் டச் செயலாளர் பி.நதியா அளித்த மனு வில் கூறியிருப்பதாவது, காங்கேயம் வட்டம், படியூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெயம் காலனி யில் க.ச. எண்:140/1ஏ ல் 2016-17 ஆம் நிதியாண் டில் 32 இலவச வீட்டு மனை பட்டா வழங் கப்பட்டது. இவர்களுக்கு வழங்கப்பட்ட பட் டாவை ‘இ’ பட்டாவாக மாற்றி, கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் சேர்க்க கோரி விண் ணப்பித்தவர்களை பயனாளிகளாக சேர்க்க வேண்டும். மேலும், சாலை வசதி, தெருவி ளக்கு வசதி, குடிநீர் வசதி செய்து தர வேண் டும். தற்போது குடியிருக்கும் அனைவ ருக்கும் வீட்டு வரி கட்டணம் ரசீது வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே, மாவட்ட வருவாய் அலு வலர் க.கார்த்திகேயன் உட்பட அரசுத்துறைக ளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்ட னர்.
