காந்தையாற்றை கடக்க மீண்டும் பரிசல் பயணத்தில் மக்கள்
மேட்டுப்பாளையம், ஜூலை 12- புதிய பாலம் கட்டும் பணிகள் முடங்கிய தால் மீண்டும் காந்தையாற்றை பரிசலில் கடக்க கிராம மக்கள் துவங்கியுள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யம் அடுத்துள்ள சிறுமுகை பேரூராட்சிக்குட் பட்ட மலையடிவார கிராமங்களான லிங்கா புரம் மற்றும் காந்தவயல் இடையே காந்தை யாறு என்னும் காட்டாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே ரூபாய் நாற்பது லட்சம் செலவில் கடந்த 2005 ஆண்டு இருபதடி உய ரத்தில் பாலம் கட்டப்பட்டது. பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதியில் கட்டப்பட்ட இப்பாலம் மழைக்கால நீர்வரத்தை சரியாக கணக்கிடாமல் கட்டப்பட்டதால் ஆரம்பம் முதலே சிக்கல் உருவானது. மழைக்காலத் தில் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டு பவானிசாகர் அணையின் நீர்மட்ட உய ரம் 95 அடியை எட்டும் போதே அதன் நீர்த் தேக்க பகுதியில் ஆற்றின் குறுக்கே கட்டப் பட்டுள்ள இந்த பாலம் தண்ணீரில் மூழ்க துவங்கி விடும். அணையின் நீர்மட்ட உயரம் நூறு அடியை கடந்து விட்டால் இந்த உயர்மட்ட பாலம் முழுவதுமாக நீருக்குள் மூழ்கி விடுவ தோடு இதன் இணைப்பு சாலைகளும் தண்ணீருக்கடியில் சென்று விடும். இதனால், ஆற்றின் அக்கரையில் உள்ள காந்தையூர், உளியூர், ஆளூர், காந்தவயல் கிராமங்கள் நீர் சூழ்ந்த தீவாகி போகும். நகர பகுதிக ளுக்கு சென்று வரும் போக்குவரத்திற்கு இப் பாலத்தை மட்டுமே நம்பியிருந்த மக்கள் இத னால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய விளைப் பொருட்களை கொண்டு செல்வது, மருத்துவம் உள்ளிட்ட அனைத்திற் கும் ஆபத்தான முறையில் பரிசல்கள் மூலமே ஆற்றை கடக்கும் சூழல் உருவாகும். இத னால் அப்பகுதி மக்கள் வெள்ளப்பெருக்கு காலத்தில் நீருக்கடியில் மூழ்காத கூடுதல் உயரத்துடன் புதிய பாலம் கட்டத்தர அர சுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து ரூ.14 கோடி செலவில் புதிய பாலம் கட்ட அனுமதியளிக்கப்பட்டு பணிகளும் கடந்தாண்டு துவங்கியது. இந் நிலையில் இவ்வாண்டு கோடை மழை வெளுத்து வாங்கிய நிலையில் பவானியாற் றில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற் பட்டு பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர துவங்கியது. மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்து வரும் மழை கார ணமாக பவானி ஆறு மற்றும் இதில் இணை யும் கிளை காட்டாறுகளான காந்தையாறு, மாயாறு போன்றவற்றில் நீர்வரத்து அதிக ரித்து பவானிசாகர் அணையின் நீர்மட்ட உய ரம் 97 அடியாக அதிகரித்து வருவதால் தற் போது மீண்டும் இப்பாலம் நீருக்கடியில் மூழ்க தொடங்கி உள்ளது. அதே போல் இதற்கு மாற்றாக கட்ட துவங்கப்பட்ட புதிய பாலப்பணிகளும் வெள்ளம் சூழ்ந்த காரணத் தால் முடங்கியுள்ளது. இதனால் காட்டாற்றை கடந்து செல்ல மீண்டும் பரிசல்களையே இப்பகுதி மக்கள் பயன்படுத்த துவங்கி யுள்ளனர்.