tamilnadu

img

நீதிமன்ற உத்தரவுப்படி ஊதியம் வழங்கிடுக: சிஐடியு ஆர்ப்பாட்டம்

நீதிமன்ற உத்தரவுப்படி ஊதியம் வழங்கிடுக: சிஐடியு ஆர்ப்பாட்டம்

அவிநாசி, செப்.24- நீதிமன்ற உத்தரவுப்படி தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சிஐடியு ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், திருமுருகன் பூண்டி நகராட்சியில் 150க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், குடிநீர் வடிகால் ஊழியர்கள் அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த ஊழியர்களாக வேலை செய்து வருகின்றனர். இத்த கைய ஊழியர்களுக்கு, குறைந்தபட்ச ஊதிய அரசாணை எண்:2(D)62இன்படி ஊதியம் வழங்க வேண்டும் என சிஐ டியு தொடுத்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் 11.09.23 ஆம் தேதி உத்தர விட்டது. இதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாக இயக்குநரும், அரசாணைப் படி ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என அனைத்து  மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்க ளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.744, குடிநீர் பணியாளர்களுக்கு ரூ.833 தின சரி ஊதியமாக கணக்கிட்டு வழங்க வேண்டும். ஆனால், 2023 ஆம் ஆண்டு முதல் ரூ.507 மட்டுமே கணக்கிட்டு வழங்கப்படுகிறது. மேற்கண்ட உத்த ரவுப்படி ஊதியம் வழங்க வேண்டும்  என வலியுறுத்தி பலகட்ட போராட்டங் கள் நடத்தப்பட்டும், அதிகாரிகள் உறு தியளித்தப்படி ஊதியம் வழங்கப் படவில்லை. மேலும், போனஸ் சட்டம்  1965 இன்படி, சட்டப்படியான போன சும் வழங்கப்படுவதில்லை.  எனவே, அரசாணைப்படி ஊதி யம் மற்றும் போனஸ் வழங்க வேண்டும்  என வலியுறுத்தி சிஐடியு ஊரக வளர்ச்சி,  உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். திருமுருகன்பூண்டி நகராட்சி அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில், சங்கத்தின் மாவட்டத் தலை வர் பழனிச்சாமி, செயலாளர் ரங்கராஜ், திருமுருகன்பூண்டி நகர்மன்ற உறுப்பி னர் சுப்பிரமணியம், சங்கத்தின் நிர்வா கிகள் லோகநாதன், ஆறுமுகம், வையா புரி, தமுஎகச கிளைச் செயலாளர் காம ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.