பேருந்தில் இருந்து எழுந்த புகை அலறியடித்து வெளியேறிய பயணிகள்
கோவை, ஜூலை 22- கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே அரசு பேருந்தில் திடீரென புகை ஏற்பட்ட நிலையில், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு பயணிகள் வெளியேறினர். கோவை - பொள்ளாச்சி இடையே இயக்கப்படும் அரசு பேருந்து ஒன்று வழக்கம் போல் செவ்வாயன்று காலை பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி இயக்கப்பட் டது. பேருந்தை பொள்ளாச்சி நடுபுணியை சேர்ந்த சிவசுப்பிர மணி (45), என்பவர் இயக்கியுள்ளார். சுமார் 90 பயணி களுடன் கோவை நோக்கி வந்த அரசு பேருந்து ஒத்தக்கால் மண்டபம் அருகே வந்தபோது முன் பகுதியில் இருந்து புகை வெளியேறியதாக தெரிகிறது. இதையடுத்து உடனடியாக பேருந்தை சாலையோரத்தில் நிறுத்திய ஓட்டுநர் சிவசுப்பிர மணி கீழே இறங்கி சென்றார். ஆனால் பேருந்தின் கதவு கள் திறக்கப்படாததால் பயணிகள் என்ன செய்வது என்று அறி யாமல், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வெளியே குதிக்க துவங்கினர். இதில் பொள்ளாச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் மோகன்ராஜ் (55) என்பவரின் கால் முறிவு ஏற்பட்டது. பேருந் தின் கியர் பாக்ஸ் பகுதியில் உள்ள ரப்பர் சூடாகி கரும்புகை வெளியேறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கோவை மாவட்டம், உடையாம்பாளையத்திலுள்ள சிபிஎம் அலு வலகத்தில் ஞாயிறன்று தீக்கதிர் சந்தா ஒப்படைக்கும் பேரவை யில், முதல் தவணையாக 71 சந்தாக்களுக்கான தொகை, கட்சி மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபனிடம் வழங்கப்பட்டது.