tamilnadu

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கொல்லிமலையில் மதுக்கடைகளை மூட உத்தரவு

நாமக்கல், ஜூலை 29- வல்வில் ஓரி விழாவினை முன்னிட்டு, கொல்லிமலை வட்டத்திலுள்ள அரசு மது பானக்கடைகள் செயல்பட தற்காலிகமாக தடை விதிக் கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாமக் கல் மாவட்ட ஆட்சியர் துர் காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொல்லி மலையில் ஆக.1, 2 ஆகிய  தேதிகளில் வல்வில் ஓரி விழா நடைபெறவுள்ளது. இதனால், கொல்லிமலை வட்டத்தில் செயல்பட்டு வரும் மதுபான சில்லரை விற்பனை கடைகளான செம் மேடு கடை எண்:6153, செங் கரை கடை எண்:6210, சோளக்காடு கடை எண்:6218 மற்றும் சேந்தமங்கலம் வட்டத்தில் இயங்கி வரும் காரவள்ளி கடை எண்: 6186 ஆகிய நான்கு டாஸ்மாக் மதுபான சில்லரை விற் பனை கடைகளையும், ஆக. 1,2,3 ஆகிய 3 நாட்கள் முழு  நேரமும் செயல்பட தற்காலி கமாக தடை விதிக்கப்பட்டுள் ளது. மேற்படி நாட்களில் சம்மந்தப்பட்ட கடைகளை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம் மந்தப்பட்டவர்கள் மீது கடு மையான நடவடிக்கை எடுக் கப்படும் என அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

வால்பாறை அதிரப் பள்ளி நீர்வீழ்ச்சி ஆற்று வெள்ளத்தில் காட்டு யானை சிக்கி,  நீண்ட நேரம் போராடி வனப்பகுதிக்கு சென் றது.