tamilnadu

img

பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட மயானத்தில் சடலத்தை எரிக்க எதிர்ப்பு

பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட மயானத்தில் சடலத்தை எரிக்க எதிர்ப்

சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஜூலை 14 – பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட மயானத்தில் சட லத்தை எரிப்பதற்கு தனிநபர் ஒரு வர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பொதுமக்களுடன் மார்க்சிஸ்ட் கட் சியினரும் இணைந்து போராட்டத் தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் வெப் படை அடுத்த உப்புக்குளம் பகு தியில் 50க்கும் மேற்பட்ட குடியி ருப்புகள் உள்ளது. இங்குள்ள மக்க ளுக்கு மயான வசதி இல்லாததால் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிதிராவிடர் நலத்துறை சார் பில் மயானத்திற்கான இடம் வழங் கப்பட்டது. இந்த இடத்தை, தனி நபர் ஒருவர் சொந்தம் கொண்டாடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளார். இதுகுறித்த வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதுவரையிலும் வழக்கின் தீர்ப்பு வெளியாகவில்லை. இந் நிலையில் உப்புக்குளம் பகுதியை  சேர்ந்த பழனி(95) என்ற முதியவர்  சனியன்று உயிரிழந்ததை தொடர்ந்து ஈமசடங்கு செய்வதற் காக அவரது உறவினர்கள் ஞாயி றன்று மயானத்திற்கு சடலத்தை கொண்டு சென்றனர். அப்போது உடலை தகனம் செய்ய விடாமல், நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி தனி நபர் ஒருவரும், வரு வாய் மற்றும் காவல்துறை அதிகாரி கள் தடுத்து நிறுத்தினர்.  எங்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த இடத்தில் இந்த சடலத்தை நல்லடக்கம் செய்துவிட்டு தான்  இங்கிருந்து கிளம்புவோம் என கூறி  பொதுமக்கள் சடலத்தின் அருகில்  அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர்.  இதனையடுத்து, சம்பவ இடத் திற்கு திருச்செங்கோடு டிஎஸ்பி  கிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சி யர் சுகந்தி பள்ளிபாளையம் போலீ சார், குமாரபாளையம் வட்டாட்சி யர் ஆகியோர் பொதுமக்களி டையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனிடையே, போலீ சார் எரிப்பதற்காக தயார் நிலை யில் உள்ள சடலத்தின் அருகே பாதுகாப்புக்காக நின்று கொண்டனர். மதியம் துவங்கி இரவு 9 மணி வரை இரு தரப்பின ரும் சமாதானம் ஆகாத நிலையில்  இறுதி கட்டமாக பட்டியலின மக் கள் மத்தியில் பேசிய அரசுத்துறை அதிகாரிகள் வழக்கு நிலுவையில் இருப்பதால் சர்ச்சைக்குரிய இடத் தில் சடலத்தை தகனம் செய்ய அனு மதிக்க முடியாது என்றனர். இதனை யறிந்த மார்க்சிஸ்ட் கட்சியினர், பட் டியலின பட்டியலின மக்களுக்கு ஆதரவாக அங்கு திரண்டனர். மயானம் உள்ள இடம் தற்போது வரையில் பட்டியலின மக்களுக் காணதே. வழக்கின் தீர்ப்பு இல் லாத நிலையில், நிலுவையில் இருக் கும்போதே, தனிநபருக்கு அதிகாரி கள் சாதகமாக நடந்து கொள்வது சரியல்ல என வாதித்தனர். மேலும்,  பிரச்சனைக்குரிய நிலத்தில், தனி நபர் தென்னை மரங்களை வைத்து  பராமரித்து வருவதை வருவாய்த் துறையினர் எப்படி அனுமதித்தீர் கள். முற்றிலுமாக அகற்ற வேண் டும் என்றனர்.  மேலும், பட்டியலின மக்களின்  உரிமைகளை பாதுகாப்பதற்கும் ஆதிதிராவிடர் நலத்துறையால் வழங்கப்பட்ட இந்த இடத்தை  பட்டியலின மக்கள் பயன்படுத்து வதற்கும் அதிகாரிகள் மறுப்பு தெரி விப்பதாகவும், தனி நபருக்கு ஆதர வாக செயல்படுவதாகவும் கண்டன  முழக்கங்களை எழுப்பினர்.  இதனையடுத்து இரு தரப்பின ரையும் சமாதானம் செய்த அதிகாரி கள், முத்தரப்பு பேச்சுவார்த் தையை உடனடியாக நடத்தி  பிரச்சனைக்கு தீர்வு காண நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதி  அளித்தனர். இதையடுத்து பட்டிய லின மக்கள் சடலத்தை அருகில் உள்ள வாய்க்கால் ஓரத்தில் எரித்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த பிரச்சனை காரணமாக 50க்கும் மேற்பட்ட போலீசார் உப் புக்குளம் பகுதியில் குவிக்கப் பட்டிருந்ததால் மதியம் துவங்கி இரவு வரை பரபரப்பான சூழல் அந்த பகுதியில் காணப்பட்டது.