தேங்காய் விற்பனையில் ரூ.59.5 லட்சம் மோசடி: ஒருவர் கைது
கோவை, ஜூலை 3- தேங்காய் விற்பனையில் ரூ.59.5 லட்சம் மோசடி செய்த வரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், உப்பிலிபாளையத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன், இவருடைய மனைவி சுஜா பார்த்திபன். இவர்க ளுக்கு பொள்ளாச்சி குரும்பபாளையத்தைச் சேர்ந்த ரவி என்ப வர் அறிமுகம் ஆனார். பின்னர் அவர் இரண்டு பேரையும் சந்தித்து தேங்காய் வியாபாரம் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனவே நாம் சேர்ந்து விவசாயிகளிடம் இருந்து தேங்காயை வாங்கி அதை விற்பனை செய்யலாம் என்று கூறினார். அதற்கு இரண்டு பேரும் சம்மதித்தனர். இதை அடுத்து கடந்த 2021 ஆம் ஆண் டில் மூன்று பேரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். பின்னர் பொள்ளாச்சி மற்றும் அதை சுற்றி உள்ள விவசாயிகளிடம் இருந்து தேங்காய்களை வாங்கி அதை பலருக்கு விற்று வந்தனர். இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு சுஜாவும் அவ ருடைய கணவரும் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை சரி பார்த்தனர். அப்பொழுது அதில் 5 லட்சத்து 23 ஆயி ரத்து 166 தேங்காய்களுக்கு கணக்கில்லை. உடனே அவர்கள் இது தொடர்பாக ரவியிடம் கேட்ட போது அதற்கு அவர் சரி யான பதிலை தெரிவிக்கவில்லை, பலமுறை கேட்டும் அவர் பதில் தெரிவிக்கவில்லை. இது குறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலை யத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அத்துடன் ஆய்வாளர் செல்வம் தலை மையில் தனி படை காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில் ரவி 5 லட்சத்து 23 ஆயிரத்து 166 தேங்காய்களை விவ சாயிகளிடம் இருந்து வாங்கியதாக கணக்கு காட்டி ரூபாய் 59.5 லட்சம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அறிந்த ரவி தலைமறைவானார். எனவே அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் பொள்ளாச்சி அருகே ஒரு வீட் டில் பதுங்கி இருந்த அவரை வியாழனன்று போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோவை நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
எனக்கு பணம் அனுப்ப வேண்டாம் நீலகிரி ஆட்சியர் ஸ்டேட்டஸ்
உதகை, ஜூலை 3- நீலகிரி மாவட்ட ஆட்சியர் படத்தை பயன்படுத்தி வாட்ஸ்- அப் வாயிலாக பணம் மோசடி செய்ய நடைபெற்ற சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, தனது பெய ரில் யாராவது பணம் கேட்டால் அனுப்பாதீர்கள் என ஆட்சி யர் பவ்யா வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். நீலகிரி மாவட்ட ஆட்சியராக லட்சுமி பவ்யா கடந்த ஓராண் டாக பணியாற்றி வருகிறார். அவரது புகைப்படத்தை பயன் படுத்தி சில அடையாளம் தெரியாத நபர்கள் போலி வாட்சப் கணக்கை உருவாக்கியுள்ளனர். அந்த எண்ணில் மாவட்ட ஆட்சியரின் தொடர்பில் உள்ளவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பணம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்தக் குறுஞ் செய்தியில் எனது வங்கிக் கணக்கில் பிரச்னை இருப்ப தால் உடனடியாக பணம் அனுப்ப முடியவில்லை. நீங்கள் பணம் அனுப்பி உதவி செய்தால், என் வேலை முடிந்த தும் உங்களுக்கு மீண்டும் பணம் அனுப்புகிறேன் என்று ஆட்சி யர் கூறுவது போல் இருந்தது. சந்தேகம் அடைந்த ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் சிலர் இதுகுறித்து ஆட்சியருக்கு தக வல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆட்சியர் லட்சுமி பவ்யா உட னடியாக மாவட்ட எஸ்.பி. நிஷாவை தொடர்பு கொண்டு போலி வாட்சப் கணக்கு குறித்து புகார் தெரிவித்துள்ளார். மாவட்ட காவல் எஸ்.பி. உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக இந்தப் போலி வாட்ஸ் அப் கணக்கு வியட்நாமில் தொடங்கி இருப்ப தாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல் ஆய்வாளர் பிரவீணா தேவி தலை மையிலான சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசா ரணை நடத்தி வருகின்றனர். தனது பெயரில் பணம் கேட்டால் யாரும் அனுப்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டசாக வைத்துள்ளார்.