லாரி மீது வேன் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு
நாமக்கல், ஆக.21- குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நின்று கொண் டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள வேம்படிதாளம் பகுதியில் பட்டு நெசவுத்தொழில் செய்து வருபவர் மோகன். இவர் தனது தாயார் கமலம், மனைவி புவனேஸ்வரி மற்றும் சுகு மார், அவரது மனைவி சுசிலா ஆகி யோர் வியாழனன்று ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறைக்கு சென்று விட்டு சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்த னர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளை யம் அருகே உள்ள பச்சாபாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது, ஓட்டுநர் சுகு மார் தூங்கிவிடவே, சாலையை விட்டு வேன் மண் சாலையில் சென்றது. அப் பொழுது கிருஷ்ணா பேக்கரி முன்பு நின்று கொண்டிருந்த ஈச்சர் லாரி மீது வேன் வேகமாக மோதியது. இவ்விபத் தில் சுகுமார், அவர் அருகிலிருந்த மோகன் மற்றும் கமலம் ஆகியோர் சம் பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், சுசிலா, புவ னேஸ்வரி ஆகியோர் பலத்த காய மடைந்த நிலையில், இருவரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த திருச்செங் கோடு காவல் துணை கண்காணிப்பா ளர் கிருஷ்ணன் தலைமையில் வெப் படை காவல் துறையினர் ,சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்க கிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.