திருநங்கைகளுக்கு கிராமத்தில் இடம் கொடுக்க எதிர்ப்பு நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் தடுத்து நிறுத்தம்
நாமக்கல், ஜூலை 16- திருநங்கைகளுக்கு கிராமத்தில் இடம் கொடுக்க அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல்லில் கடந்த ஜூலை 10 ஆம் தேதியன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் 33 திருநங்கைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டா லின், வரகூராம்பட்டி எல்லைக்காடு பகுதியில் பாறை புறம்போக்கில் வீட்டுமனைப்பட்டா வழங்கினார். அந்த நிலத்தை திருநங்கைகளுக்கு அளந்து கொடுக்க புதனன்று நில அளவைத்துறை அலுவலர்கள் வந்த போது, அக்கிராம மக்கள் பட்டா விற்குரிய நிலத்தை அளக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். பல ஆண்டுகளாக கிராமத்தினர் பயன்படுத்தி வரும் இடத்தை எங்க ளுக்கு தெரியாமலேயே பட்டா போட்டு கொடுத்துள்ளனர். திரு நங்கைகளுக்கு வேறு இடத்தில் பட்டா போட்டு கொடுக்க வேண்டும். பட்டாவில் இந்த இடம் தான் என குறிப்பிடப்படவில்லை, என்றனர். இதுகுறித்து திருநங்கைகள் கூறு கையில், சமூகத்தில் ஒடுக்கப்பட் டுள்ள திருநங்கைகளுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், பாறை புறம்போக்கில் எங்களுக்கு அரசு வழங்கியுள்ள நிலத்தை நாங்கள் பயன்படுத்தக் கூடாது என மனிதாபிமானம் இல்லா மல் எதிர்க்கிறார்கள். நிலத்தை பார்க்க வந்த எங்களை மிரட்டுகிறார் கள். நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு எங்களுக்கு வீட்டுமனை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், என்றனர். இதுகுறித்து தகவலறிந்த திருச் செங்கோடு நகர காவல் நிலைய ஆய் வாளர் வளர்மதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இருதரப்பினரி டமும் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்களுக்கு குறைகள் இருந்தால் வட்டாட்சியரிடம் மனு அளிக்க வேண் டும், என கிராமமக்களுக்கு அறிவு றுத்தப்பட்டது. மேலும், நிலத்தை அளவீடு செய்ய வந்தவர்கள் உயர் அதிகாரிகளிடம் பேசிவிட்டு உரிய தீர்வு காணப்படும் என திருநங்கை களிடம் தெரிவிக்கப்பட்டது.