tamilnadu

img

தற்காலிக பணி நியமன முடிவைக் கைவிட வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

தற்காலிக பணி நியமன முடிவைக் கைவிட வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜூலை 11–  அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் மற்றும் மருத் துவ ஊழியர்களை 11 மாத தற்காலிக ஒப்பந்த முறையில் நியமிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என வலியு றுத்தி ஈரோட்டில் வியாழனன்று செவிலியர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்த்திற்கு மாவட்டத் தலைவர் ஜெயசுகி தலைமை ஏற்றார். இதில், கொரோனா பெருந்தொற்று காலத் தில் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட 700-க்கும் மேற் பட்ட செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், தற்காலிக பணி நியமன முறை செவிலியர்களின் எதிர் காலத்தைப் பாதிக்கும். இதனால், அரசு மருத்துவமனைக ளின் செயல்பாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். நிரந்தர தன்மையுடைய பணியிடங்களை உருவாக்க வேண்டும், சம  வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், இவ்வமைப்பின் மாநிலத் தலைவர் கு.சசிகலா, மாவட்ட செயலாளர் நிஷா செயற்குழு உறுப்பி னர் அர்னால்ட், அரசு ஊழியர் சங்கத்தின் ச.செந்தில்நாதன், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தைதொடர்ந்து, அரசு ஊழி யர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மு.சீனிவாசன் தலைமையில், மேற்கண்ட கோரிக்கை மனுவினை ஈரோடு ஆட்சியரிடம் மனுவாக அளித்தனர்.