tamilnadu

img

வடகிழக்கு பருவ மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

வடகிழக்கு பருவ மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கோவை, அக். 22- வடகிழக்கு பருவமழை தீவி ரம் காரணமாகக் கோவையில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட பகு திகளில் கடந்த ஐந்து நாட்களாக வெள்ள நீர் வீடுகளைச் சூழ்ந்துள்ள தால் பொதுமக்கள் பெரும் சிரமத் திற்கு ஆளாகியுள்ளனர். அன்னூர் பழனி கிருஷ்ணா அவென்யூ மற்றும் புவனேஸ்வரி நகர் குடியிருப்புப் பகுதிகளில் நூற் றுக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. முறை யான வடிகால் வசதி இல்லாததால் ஒவ்வொரு மழைக்காலத்திலும் இதே நிலை தொடர்வதாகவும், இதனால் தங்கள் அன்றாடப் பணி கள் பாதிக்கப்பட்டு வீடுகளுக்குள் ளேயே முடங்கிவிட்டதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்ற னர். வெள்ள நீர் சூழ்ந்திருப்பதால் இப்பகுதிகளில் நோய் தொற்று  பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், நிலத்தடி நீர் தொட்டிகளில்  கழிவு நீர் கலப்பதால் குடிநீர் மற் றும் அன்றாடப் பயன்பாட்டுக்கான நீர் அசுத்தமடைந்துள்ளதாகவும் குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டு கின்றனர். வீடுகளில் நிறுத்தியுள்ள வாகனங்கள் நீரில் மூழ்கும் நிலை  உள்ளதால் அவற்றை இயக்க முடி யாத சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து உள்ளாட்சி நிர்வா கம் மற்றும் அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை என ஆதங் கத்தைத் தெரிவித்த மக்கள், ஆக் கிரமிக்கப்பட்டுள்ள ஓடை வழித் தடத்தை சீரமைத்து, முறையான மழைநீர் வடிகால்களை ஏற்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத் துள்ளனர். இதேபோன்று, கிணத்துக் கடவு சிறுகலந்தை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மழைக்காலத்தில் பள்ளியின் கழிவறையிலிருந்து மழை நீருடன் கழிவு நீர் வெளி யேறி பள்ளி வளாகம் முழுவதும்  சேறும் சகதியுமாகத் தேங்கியுள் ளது. இதனால், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாவதாலும் மாணவ, மாணவிகளுக்குப் பல் வேறு நோய்கள் ஏற்படும் அபாயம்  உள்ளதாகப் பெற்றோர் மற்றும்  பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின் றனர். எனவே, மழை நீர் தேங்காத வண்ணம் நிரந்தர ஏற்பாட்டைச் செய்து மாணவர்கள் சிரமமின்றி கல்வி கற்க வழிவகை செய்ய வேண்டும் என அவர்கள் வலியு றுத்தியுள்ளனர். சேலத்திலும் கன மழை சேலம் மாவட்டத்திலும் வட கிழக்கு பருவமழை தீவிரம் கார ணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பழைய பேருந்து நிலையம், புதிய  பேருந்து நிலையம் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இத னால் தீபாவளி முடிந்து ஊர்  திரும்புவோர் மற்றும் வேலைக்குச்  செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். வாகன ஓட்டிகள்  முகப்பு விளக்கை எரியவிட்டவாறு  வாகனங்களை இயக்க வேண்டியி ருந்தது. சேலம் மாவட்டத்தில் செவ் வாய் இரவு மட்டும் 440.40 மில்லி மீட் டர் மழை பதிவாகியுள்ளது. குறிப் பாகச் சேலம் மாநகரப் பகுதியில் 18.9 மில்லி மீட்டர் மழை பெய்துள் ளது. தொடர் மழையின் காரணமாக  புதனன்று சேலம் மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக் கப்பட்டது குறிப்பிடத்தக்கது.