நாம் அனுபவிக்கும் முன்னேற்றத்தை எந்த மத நூலும் தரவில்லை விஞ்ஞானம் மட்டுமே தந்துள்ளது – அ.சவுந்திரராசன்
கோவை, செப்.27- இந்து-முஸ்லீம் என மோதிக் கொள்ளும்போது, தொழிலாளி வர்க் கம் பிளவுபடுகிறது. நாம் அனுபவிக் கும் ஒவ்வொரு முன்னேற்றமும் எந்த மத நூலும் கொடுக்கவில்லை, விஞ் ஞானம் மட்டுமே தந்துள்ளது என சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்திர ராசன் தெரிவித்தார். கோவையில், ஒப்பந்த மற்றும் அனைத்துப் பிரிவு தொழிலாளர்களின் கோரிக்கைக்கான மாநாடு வெள்ளி யன்று காந்திபுரம் அருகே உள்ள சித்தா புதூரில் நடைபெற்றது. இம்மாநாட்டில், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்திரராசன் பேசுகை யில், சமூகத்தில் மொழி, மதம், இனம், நிறம், மற்றும் முக்கியமாக ஜாதி போன்ற பல்வேறு பிளவுகள் வேண்டு மென்றே கற்பிக்கப்படுகின்றன. ஆனால், இவை எதுவும் நிரந்தரமா னவை அல்ல, காலப்போக்கில் கலப்புத் திருமணங்கள், மதமாற்றங்கள் என மாறும் தன்மை கொண்டவை. ஆனால், சமூகத்தின் அடிப்படையான மற்றும் எல்லோரையும் உள்ளடக்கிய மிக முக் கியமான பிளவு ஒன்று உள்ளது. அது தான் உழைப்பவர்கள் மற்றும் உழைப் பைத் திருடுபவர்கள் என்ற பிளவு. ஒரு அரசு எந்த மொழிக்காரனுக் கானது என்று சொல்வதில்லை. ஆனால், அது முதலாளிகளுக்கான அரசு, தொழிலாளிகளுக்கான அரசு, அல்லது வியாபாரிகளுக்கான அரசு என்றுதான் அடையாளப்படுத்தப்படு கிறது. இங்கு உழைப்பாளர் - உழைப் பைத் திருடுபவர் பிளவுதான் அனைத்தையும் தீர்மானிக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தொழிற்சாலைகளில் நூறு சதவிகிதம் நிரந்தரத் தொழிலாளர்களே இருந்த னர். அவர்களின் போராட்டங்களின் விளைவாகவே சங்க உரிமைகளும், சலுகைகளும் கிடைத்தன. ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறி விட்டது. நமது நாட்டின் மொத்த தொழிலா ளர்களில் 97 சதவிகிதத்திற்கும் அதிகமா னோர் அமைப்புசாரா மற்றும் முறை சாரா தொழில்களில்தான் பணியாற்று கிறார்கள். இதில் ஆட்டோ தொழிலாளி, தையல் தொழிலாளி, கட்டுமானத் தொழிலாளி, மென்பொருள் தொழி லாளி முதல் சுயதொழில் செய்வோர் வரை அடக்கம். நாட்டினுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 65 சதவி கிதத்தை இந்த முறைசாரா, நிரந்தர மற்ற, சட்டப் பாதுகாப்பற்ற தொழிலா ளர்கள்தான் உற்பத்தி செய்து கொடுக் கிறார்கள். இவர்களைச் சுரண்ட, இன்று முதலா ளித்துவமும் அரசுகளும் புதிதாகக் கண்டுபிடித்திருக்கும் வழிமுறைதான் ஒப்பந்தத் தொழிலாளர் முறை (Contract Labour). “நீ என் தொழிலாளி அல்ல, உனக்கும் எனக்கும் சம்பந்த மில்லை” என்று முதலாளி கூறிவிடு கிறான். தொழிலாளிக்குச் சம்பளம் கொடுப்பது ஒப்பந்ததாரர் என்பதால், தொழிற்சங்க உரிமையும், பாது காப்பும் கேள்விக்குறியாகின்றன. இதைவிட புதிய வடிவம், ‘கிக் ஒர்க் கர்ஸ்’ (Gig Workers) எனப்படும் உணவு விநியோகம் செய்யும் இளைஞர்கள் (Swiggy, Zomato போல). இவர்களை ‘தொழிலாளி’ எனச் சொல்லாமல், ‘கூட்டாளர்’ (Partner) என்று சொல்லி, இவர்களின் உழைப்பின் பலனை முதலாளிகள் கோடிக்கணக்கில் அனு பவிக்கிறார்கள். இவர்களின் வேலை யை போகச்செய்ய, செயலியில் (App) இருந்து அவர்களின் பெயரை நீக்கினால் போதும். ஆனால், அடிப் படை நியதி என்னவென்றால், என் உழைப்பால் ஆதாயம் அடைபவன் எவனோ, அவன்தான் என் முதலாளி. அவனுக்கு நான் கூலி கேட்பேன். அதற் கான சங்கம் எனக்கு வேண்டும். தமிழகத்தில் ஆட்சி செய்யும் திமுக அரசு, சட்டமன்றத் தேர்தலின்போது தொழிலாளர்களுக்கு அளித்த வாக் குறுதிகளில், அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள், தூய்மைப் பணியாளர் கள், பத்து ஆண்டுகள் ஒப்பந்தப் பணி செய்தோரை நிரந்தரமாக்குவது, பழைய ஓய்வூதியத் திட்டம் என எதை யும் அமல்படுத்தவில்லை. முன்பு, சட்டத்தை மீறும் முதலா ளிக்கு ஆறு மாதம் வரை சிறை தண் டனை வழங்க சட்டம் இருந்தது. ஆனால், இன்று, கூலியை கேட்டால், வேலை போவதைப் பற்றியும், குறைந்த பட்ச கூலி அமல்படுத்தப்படாமல் திருடப்படும் பணத்தைப் பற்றியும் அரசு கவலைப்படுவதில்லை. ஓய்வுபெறும் தொழிலாளியின் முப்பது ஆண்டுகால சேமிப்பான PF மற்றும் கிராஜுவிட்டி பணத்தைக் கொடுக்க மறுப்பது போன்ற அநீதிகளுக்கு எதிராக போக்குவரத்துத் தொழிலாளர்கள் போன்றோர் நீண்ட நாட்கள் போராட வேண்டியுள்ளது. தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான சங்க உரிமையைப் பறிக் கவே முதலாளித்துவமும், அவர்களுக் குத் துணை நிற்கும் அரசுகளும் நினைக் கின்றன. இதற்காகத்தான் மொழி, ஜாதி, மதம் போன்ற பிரிவினைகளை சமூகத் தில் ஆழமாகத் திணிக்கிறார்கள். மக் கள் இந்து-முஸ்லீம் என மோதிக் கொள்ளும்போது, தொழிலாளி வர்க் கம் பிளவுபடுகிறது. இது கோயம்புத்தூ ரில் முன்பு நடந்த கலவரங்களைப் போல, எந்த மக்கள் நலனையும் சாதிக் காது, மாறாக பாதிப்பை மட்டுமே ஏற்ப டுத்தும். மதவெறி எந்தவொரு நாட்டிற்கும், சமூகத்திற்கும் முன்னேற்றத்தைக் கொடுத்தது கிடையாது. வரலாற்றில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டது மதச் சண்டைகளில்தான். நாம் இன்று அனுப விக்கும் ஒவ்வொரு முன்னேற்றத்தை யும் விஞ்ஞானம் மட்டுமே தந்துள்ளது, எந்த மத நூலும் தரவில்லை. செங்கொடி இயக்கத்தின் இலக்கு ஏகாதிபத்தியம் உலக நாடுகளை சுரண்டி, தனக்கு வேண்டியதை சாதிக்க போரைத் தூண்டுகிறது. இதற்கு எதிராக உலகெங்கும் தொழிலாளர்கள் போராட வேண்டும். செங்கொடி இயக்கம் இந்தப் போராட்டங்களை முன்னெடுத்து செல்லும். நமது கட்சியின் மாநில மாநாட்டில், ஒப்பந்தத் தொழிலாளி கள், முறைசாரா தொழிலாளிகள் ஆகி யோரை அணிதிரட்டுவதே பிரதான இலக்காக நிர்ணயிக்க இருக்கிறோம். அவர்களுக்கான சங்கங்களை அமைத் தல், குறைந்தபட்ச கூலியை பெற்றுத் தருதல், பணி நிரந்தரம் மற்றும் பணி பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகிய முழக்கங்களை முன்வைத்து, மூலதனத் தையும், முதலாளிகளையும், அவர் களுக்குத் துணை நிற்கும் அரசாங்கங் களையும் எதிர்த்து மோத வேண்டும். இந்த வெற்றியை ஈட்ட வேண்டிய பொறுப்பு நம்முடையது. நவம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ள பிரம்மாண்ட மான உழைக்கும் வர்க்கப் பேரணியில் இதை மேலும் வலுப்படுத்த அனைவ ரும் உறுதியேற்க வேண்டும் என்றார்.
