பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில் 16 வயது சிறுமியைக் காரில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த 9 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி கடந்த ஜூலை 4 ம் தேதியன்று வீட்டை விட்டுச்சென்ற நிலையில், அவர் மாயமானதாக அப்பெண்ணின் தந்தை பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், சந்தேகத்தின் அடிப்படையில் குமரன் நகரை சேர்ந்த அமானுல்லா என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் அமானுல்லா அந்தசிறுமியை கடத்திச் சென்று மிரட்டி பலாத்காரம் செய்ததும், பின்னர் அவரது நண்பர்களும் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.இதையடுத்து அமானுல்லா (25) அவரது நண்பர்கள் பகவதி (26), முகமது
அலி (28), டேவிட் செந்தில் (30), முகமது ரபிக் (28), அருண் நேரு (28), சையத் முகமது (25), இர்ஷாத் முகமது (28), இர்ஷாத் பாஷா (28) ஒன்பது பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தவழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.முன்னதாக, இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மேற்குறிப்பிட்டபத்து பேரும் ஒன்றன் பின் ஒன்றாக அந்தபெண்ணை மிரட்டி கடந்த பல மாதங்களாக வன்புணர்வு செய்து வந்துள்ளனர்.
இச்சூழலிலேயே வியாழனன்று வீட்டைவிட்டு வெளியே சென்ற சிறுமி வீட்டிற்குத்திரும்பாத நிலையில் வேறு இரண்டுஇளைஞர்கள் அவரை பொள்ளாச்சி - ஆழியாறு சாலையில் காரில் கடத்திச்சென்றது விசாரணையில் தெரிய வந்தது.இதையடுத்து அந்த பெண்ணின்தொலைபேசி எண்ணிற்கு வந்த அழைப்புகளை வைத்து சிறுமியை மீட்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.இதனால் சுதாரித்துக் கொண்ட கடத்தல்காரர்கள் சிறுமியை ஆழியாறு சாலையில் இறக்கி விட்டுச் சென்றதாகத் தெரியவருகிறது. இதனைத் தொடர்ந்து சிறுமியை மீட்ட காவல்துறையினர் அவரை பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பொள்ளாச்சியில் மீண்டும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.