யானைகளை பாதுகாக்க புதிய தொழில்நுட்பங்கள் தேவை
உலக யானைகள் தினம்
உலக யானைகள் தினத்தை (ஆக.12) முன்னிட்டு, யானைகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து ‘ஓசை’ அமைப்பின் நிறுவனரும், வன உயிரின ஆர்வலருமான காளிதாசன் தீக்கதிர் நாளிதழுக்கு பிரத்யோகப் பேட்டியளித்தார். அப்போது ஆப்பிரிக் காவிலும், ஆசியாவிலும் மட்டுமே வாழும் யானைகளில், ஆசிய யானைக ளில் பாதிக்கு மேல் இந்தியாவில், குறிப் பாக தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ளன. கோவை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகள் உலகிலேயே அதிக யானைகள் வாழும் இடமாகத் திகழ்கின்றன. காடுகளைக் காக்க யானைகள் அவசியம் இதனால், யானைகளைப் பாதுகாக் கும் பொறுப்பு நம்முடையது. காடு களைக் காக்க யானைகள் அவசியம். முன்பு வேட்டையால் யானைகள் உயிரி ழந்தன. இப்போது வேட்டை தடுக்கப்பட் டாலும், அதை மேலும் நவீனப்படுத்த வேண்டும். ஆனால், வேட்டையைவிட ரயில் விபத்துகளாலும், சட்டவிரோத மின்சார வேலிகளாலும் யானைகள் அதி கம் உயிரிழக்கின்றன. குறிப்பாக ஆண் யானைகளின் உயிரிழப்பு அதிகரித்துள் ளது. ரயில் விபத்துகளைத் தடுக்க, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில் நுட்பம் சிறப்பாகச் செயல்படுகிறது. இதை இந்தியா முழுவதும் பயன்ப டுத்த வேண்டும். மின்சார வேலிகளால் யானைகள் உயிரிழப்பது, அவை காட்டை விட்டு வெளியே வருவதால் ஏற்படுகிறது. இது யானைகளுக்கும் மனிதர்க ளுக்கும் தீங்கு விளைவிக்கிறது. யானைகள் வெளியே வராமல் தடுக்க, அவற்றின் வாழிடத்தை மேம்படுத்த வேண்டும். ‘எலிஃபண்ட் காரிடார்கள்’ முக்கியமானவை யானைகள் கடக்கும் ‘எலிஃபண்ட் காரிடார்கள்’ (யானை வழித்தடங்கள்) முக்கியமானவை. தமிழகத்தில் 42 வழித்தடங்கள் அடையாளம் காணப் பட்டு, நிபுணர்கள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். ஆனால், இவை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக் கப்படவில்லை. “இந்த வழித்தடங் களை உடனடியாக அறிவித்தால், யானைகள் தடையின்றி நடமாட முடி யும். இல்லையெனில், வாழிடம் சுருங்கி, உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை யால் யானைகள் காட்டை விட்டு வெளியே வரும்,” என்று அவர் எச்சரித் தார். வாழிடத்தின் தரத்தை மேம்படுத்த வேண்டும் யானைகளுக்கு ‘புஷ்-புல்’ (தள்ளு தல்-ஈர்த்தல்) கோட்பாடு உள்ளது. காட் டில் உணவு, தண்ணீர் கிடைக்காத போது, வாழிடம் அவற்றை வெளியே தள்ளுகிறது. வெளியே, விவசாயிகள் பயிரிடும் பயிர்கள் யானைகளை ஈர்க் கின்றன. இதனால் மனித-யானை மோதல் அதிகரிக்கிறது. இதைத் தவிர்க்க, வாழிடத்தின் தரத்தை மேம்ப டுத்த வேண்டும். “எல்லா யானைகளும் வெளியே வருவதில்லை. குறிப்பிட்ட ‘பிரச்சினை யானைகள்’ மட்டுமே வருகின்றன. இவற்றை அடையாளம் காண நவீன தொழில்நுட்பமும் ஆய்வுகளும் தேவை. 1990களில் கண்டறியப்பட்ட அறிவியல் தகவல்களை வைத்து இன் னும் மேலாண்மை செய்கிறோம். ஆனால், தற்போதைய நிலைமை குறித்த ஆய்வுகள் இல்லை,” என்று அவர் கவலை தெரிவித்தார். யானைகளைக் கண்காணிக்க ‘ரேடியோ காலர்’ கருவி பயன்படுத்தப் பட வேண்டும். கோவையில் இது தோல் வியடைந்தாலும் மீண்டும் முயற்சிக்க வேண்டும். “யானை-மனித மோதலைத் தவிர்ப் பதே உலக யானைகள் தினத்தின் நோக் கம். யானைகள் வாழும் பகுதி அருகே உள்ள விவசாயிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். இரு தரப்புக்கும் பாதிப்பில்லாத நவீன அறிவியல் யுக்தி களைப் பயன்படுத்த வேண்டும். இதற்கு கூடுதல் ஆய்வுகளுக்கு நிதி ஒதுக்கப் பட வேண்டும். தனி அமைப்பு அமைத்து, பிரச்சினைக்குரிய யானை களை அடையாளம் காண கள ஆய்வு கள் மேற்கொள்ள வேண்டும். காடுகள் வேண்டும் “நமது பிள்ளைகளுக்கு காடு வேண் டும்; அந்தக் காட்டில் யானைகள் வேண் டும். யானைகள் வாழ்ந்தால்தான் வருங் கால சந்ததியினர் நலமாக வாழ முடி யும். இதை அனைவருக்கும் பரப்ப வேண்டும். யானைகளையும் மனிதர் களையும் இணக்கமாக வாழ வைக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார். - கோவை கார்த்திக்