பவானியாற்றில் புதிய நீரேற்று நிலையம் 90 சதவீதப் பணிகள் நிறைவு
மேட்டுப்பாளையம், செப்.3- மேட்டுப்பாளையத்தில் ரூபாய் 20 கோடி செலவில் பவானி யாற்றில் புதிய நீரேற்று நிலையம் அமைக்கும் 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில், திட்டப் பணிகளை ஆ.ராசா எம்.பி நேரில் ஆய்வு மேற்கொண்டார். கோவை, திருப்பூர், ஈரோடு என மூன்று மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன தேவைகளை பூர்த்தி செய்து வரும் பவானி ஆற்றிலிருந்து பதினைந்திற்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்களுக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. தற் போது நகர பகுதியில் உள்ள நீரேற்று நிலையம் மூலம் ஆற்றி லிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு சுத்திகரிக்கபட்டு மேட்டுப் பாளையம் பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யப் பட்டு வருகிறது. இந்நிலையில் நகராட்சி மற்றும் இங்குள்ள ஆலைகளின் கழிவு நீர் கலப்பதால் குடிநீர் தூய்மையின்றி இருப்பதாக தெரிவிக்கும் இப்பகுதி மக்கள், ஆற்று நீர் மாசடை யாத மலையடிவார பகுதியான விளாமரத்தூர் என்னுமிடத் தில் இருந்து தண்ணீர் எடுத்து குடிநீராக விநியோகிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு விளாமரத்தூரில் இருந்து தண்ணீர் எடுக்கும் புதிய திட்டத்திற்கு ரூ.20 கோடி ஒதுக்கி புதிய நீரேற்று நிலையம் அமைக்கும் பணியை துவக்கியது. இத்திட்ட பணிகள் தற்போது 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில், புதனன்று முன்னாள் ஒன்றிய அமைச்சரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா விளாமரத்தூர் பகுதியில் நேரில் ஆய்வு செய்தார். விரைந்து பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரி களுக்கு ஆலோசனை வழங்கினார். இதற்கு முன்னதாக மேட்டுப்பாளையம் நகராட்சிக் குட்பட்ட பாரதி நகர் பகுதியில் பிளேவர் பிளாக் கற்கள் மூலம் அமைக்கப்பட்ட சாலையை திறந்து வைத்தார். கோவிந்த சாமி நகரில் புதிய போர்வெல் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். பின்னர் 2 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் புதிய மீன் இறைச்சி மார்கெட் அமைக்கும் கட்டுமான பணியை ஆய்வு செய்தார். இந்நிகழ்வுகளின் போது துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.