tamilnadu

img

திருப்பூர் தியாகி குமரன் நினைவிடத்திலிருந்து பிஎஸ்என்எல் மாநாட்டுக்கு தேசியக்கொடி பயணம்

திருப்பூர் தியாகி குமரன் நினைவிடத்திலிருந்து பிஎஸ்என்எல் மாநாட்டுக்கு தேசியக்கொடி பயணம்

திருப்பூர், ஜூலை 21- கோவையில் செவ்வா யன்று தொடங்கவுள்ள பிஎஸ்என்எல் அகில இந்திய 11ஆவது மாநாட்டிற்கு, திருப்பூர் தியாகி குமரன் நினைகத்தில் இருந்து தேசி யக் கொடி எடுத்துச் செல்லப் பட்டது. திங்களன்று திருப்பூரில் இருந்து தியாகி திருப்பூர் குமரன் நினைவிடத்தில் இருந்து தேசியக் கொடியை சிஐடியு சுமைப்ப ணித் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர்  எம்.ராஜகோபால் எடுத்துக் கொடுத்தார். பிஎஸ்என்எல் மாநில உதவிச் செயலாளர் அருண்குமார் பெற்றுக் கொண்டார். அருண் குமார் மற்றும் கிளைத் தலைவர் ராதா கிருஷ்ணன், ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல், தொலைத்தொடர்பு ஊழியர் சங்க நிர்வாகி விஸ்வநாதன், ஒப்பந்தத் தொழிலாளர் சங்க  நிர்வாகிகள் ரமேஷ், செந்தில்குமார் ஆகி யோர் கொண்ட குழுவினர் தேசிய கொடியை  எடுத்துக் கொண்டு கோவை மாநாட்டுத் திடலை நோக்கி பயணமானார்கள். முன்னதாக, பிஎஸ்என்எல் முன்னாள் மாநில உதவிச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி யன், மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயபி ரகாஷ், ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர்  பா.சௌந்தரபாண்டியன் ஆகியோர்  வாழ்த்திப் பேசினர். முடிவில் மாநில உதவிச்  செயலாளர் அருண்குமார் நன்றி கூறினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல், தொலைத்தொடர்பு ஊழியர் சங்கத்தினர், ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத் தினர் திரளாகப் பங்கேற்றனர்.