நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், யூத் ரெட் கிராஸ் மற்றும் போதைப் பொருள் தடுப்புக்குழு சார்பில், ‘போதைப்பொருள் ஒழிப்பு நடைப்பயண விழிப்பு ணர்வு’ வியாழனன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் (பொ) மு.ராஜேஸ்வரி, மோகனூர் சிறப்பு காவல் உதவியாளர் ஜெயச்சந்திரன், விலங்கியல் துறைத் தலைவர் ராஜசேகர பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.