அரசு கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா
நாமக்கல், செப்.13- நாமக்கல் அரசு கலைக்கல்லூரி பட்டம ளிப்பு விழாவில், 359 மாணவர்களுக்கு பட் டங்கள் வழங்கப்பட்டன. நாமக்கல் - மோகனூர் சாலை, லத்துவாடி யில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2024 ஆம் ஆண்டு உயர்கல்வி முடித்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. கல்லூரி முதல் வர் (பொ) மு.ராஜேஸ்வரி பங்கேற்று பட்டங் களை வழங்கினார். இவ்விழாவில், இள நிலை பட்டப்படிப்பு முடித்த 254 மாணவர்க ளுக்கும், முதுநிலை பட்டமேற்படிப்பு முடித்த 105 மாணவர்களுக்கும் என மொத்தம் 359 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இந்நிகழ் வில், கல்லூரி துறைத்தலைவர்கள், பேராசிரி யர்கள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.