tamilnadu

முதலிபாளையத்தில் குப்பை கொட்டும் பிரச்சனை ஆட்சியர், ஆணையர் பேச்சுவார்த்தை தோல்வி

முதலிபாளையத்தில் குப்பை கொட்டும் பிரச்சனை ஆட்சியர், ஆணையர் பேச்சுவார்த்தை தோல்வி

திருப்பூர், செப். 18 - முதலிபாளையம் பகுதியில் குப்பை  கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து  அப்பகுதி மக்கள் போராடி வரும் நிலை யில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர், திருப் பூர் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன் பாடு ஏற்படவில்லை. மக்கள் தொடர்  காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள் ளனர். திருப்பூர் மாநகராட்சி குப்பையை, முதலிபாளையத்தில் உள்ள பாறைக்கு ழியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரி வித்து அப்பகுதியைச் சேர்ந்தோர் போராடி வருகின்றனர். புதனன்று மாநக ராட்சி அலுவலகம் முன்பு, காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதாக  அறிவித்திருந்தனர். இந்நிலையில்  பேச்சுவார்த்தை நடத்த அழைப்ப தாகக் கூறி மாநகராட்சிக்கும், ஆட்சியர கத்துக்கும் அதிகாரிகள் அலைக்கழிப்ப தாக கூறி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்த னர். அத்துடன் ஆட்சியர் அலுவலகத் தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர்.  போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேரை  தெற்கு போலீஸார் கைது செய்து, கரட் டாங்காடு பகுதியில் உள்ள மண்ட பத்தில் தங்க வைத்தனர். இரவு முழு வதும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். வியாழனன்று காலையும் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்ததால், முதலிபாளையம் பகு தியைச் சேர்ந்தோர் அங்கு திரண்ட னர்.  இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே, மாநகராட்சி ஆணையர் அமித் ஆகியோர் அவர்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாநக ராட்சி குப்பை கொட்ட, அதிகபட்சம் 3  மாத கால அவகாசம் வழங்க அதிகாரி கள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட் டது. இதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரி வித்தனர். திடக்கழிவு மேலாண்மையை பின்பற்றி மாநகராட்சி வேறு பகுதியில் குப்பை கொட்டிக் கொள்ளட்டும். தங் கள் பகுதியில் குப்பை கொட்டக் கூடாது  என எதிர்ப்பு தெரிவித்தனர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாத  நிலையில், தொடர் காத்திருப்புப்  போராட்டத்தில் ஈடுபட மக்கள் முடி வெடுத்துள்ளனர்.