பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை புகாரின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க மாதர் சங்கம் வலியுறுத்தல்
தருமபுரி, செப்.24- பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை புகாரின் மீது சட்டப்படி யான நடவடிக்கை எடுக்க வேண் டும் என மாதர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தருமபுரி மாவட் டத் தலைவர் ஏ.ஜெயா, மாவட்டச் செயலாளர் ஆர்.மல்லிகா ஆகி யோர் விடுத்துள்ள அறிக்கையில், பாப்பாரப்பட்டி காவல் நிலை யத்தில் தனிப்பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜாராம். இவர் இதற்கு முன்பு பணியாற்றிய தருமபுரி நகர காவல் நிலையத்தில், குடும்ப பிரச்சனை காரணமாக தனது கண வர் மீது புகார் கொடுத்த பெண்ணை கிணற்றில் தள்ளி கொலை செய்ய முயன்ற விவகாரத்தில் அதியமான் கோட்டை போலீசார் அவரை கைது செய்துள்ளனர். குடும்ப பிரச்சனை யில் புகார் கொடுக்க வந்த பெண்ணை பாலியல் ரீதியாக பயன் படுத்திவிட்டு, அவருடன் சேர்ந்து வாழ்ந்துவிட்டு, அவரை நயவஞ்சக மாக அழைத்துச் சென்று கிணற்றில் தள்ளி விட்டு கொல்ல முயற்சித் திருக்கிறார். இத்தகைய பெண் ணின் மீதான வன்கொடுமையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கி றது. மேற்கண்ட ராஜாராம் போன்ற காவல்துறை அலுவலர்கள் பல காவல் நிலையங்களில் புகார் கொடுக்க வரும் பெண்களிடம் கண்ணியமாகவும் கனிவாகவும் நடந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது. நள்ளிரவில் இளம் பெண்ணை தனது இருசக்கர வாக னத்தில் அழைத்துச் சென்று கிணற் றில் தள்ளி கொல்ல முயன்றதும், கிணற்றில் இரவு முழுவதும் தண் ணீரில் தத்தளித்து உயிருக்கு போரா டிய அந்த இளம் பெண்ணை அப்ப குதியில் இருந்தவர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். பொதுமக்க ளுக்கும், பெண்களுக்கும் பாது காப்பு வழங்க வேண்டிய பொறுப் பில் இருக்கும் காவல்துறை அதி காரிகள் இத்தகைய கண்ணிய குறைவான செயலிலும், பெண்க ளுக்கு எதிரான கொடும் குற்றத்தி லும் ஈடுபடுவது மிகவும் கண்ட னத்திற்குரியது. இதற்கு முன்னர் பணியாற்றிய பல இடங்களில் ராஜாராம் மீது பல்வேறு புகார்கள் கூறப்படுகி றது. மதுபானத்தை பதுக்கி விற்ப வர்கள், கஞ்சா உள்ளிட்டவற்றை போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள், கள்ள லாட்டரி வியா பாரிகளிடம் மாமூல் வசூலித்துக் கொண்டு சமூக விரோதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. ராஜாராம் மீது உரிய விசாரணை நடத்தி, அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை யும், கிரிமினல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும். காவல் நிலையங் களில் தங்களது பிரச்சனைகள் மற் றும் குறைகள் குறித்து புகார் கொடுக்க வரும் பெண்களிடம் கண் ணியமாகவும், கனிவாகவும் நடந்து கொள்வதற்கு காவல் துறை யினருக்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் பெண் கள், குழந்தைகள் மீதான வன் முறைகளை கட்டுப்படுத்துவதற்கு சட்டப்படியான நடவடிக்கையை எடுப்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.