கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த இருவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்
திருப்பூர், அக். 3 – கரூரில் த.வெ.க. பரப்பு ரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரி ழந்த திருப்பூர் மாவட்டத் தைச் சேர்ந்த இருவர் குடும் பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.10 லட்சத்திற் கான காசோலையை மாநில செய்தி மற்றும் தமிழ் வளர்ச் சித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார். கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி சனியன்று கரூரில் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மொத்தம் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இவர்களில் வெள்ளகோ வில், காமராஜபுரத்தைச் சேர்ந்த மணி கண்டன் (33); செம்மாண்டம்பாளையத்தைச் சேர்ந்த கோகுலபிரியா (29) ஆகியோர் திருப் பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் உயிரிழந்த தகவலறிந்து கடந்த ஞாயிறன்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் அவர்களது வீட்டுக்குச் சென்று உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்ப டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறி வித்திருந்ததைத் தொடர்ந்து, வெள்ளியன்று, காங்கேயம் நகராட்சி அலுவலகத்தில் மணி கண்டன், கோகுலப்பிரியா ஆகிய இருவ ரது குடும்பத்தாரை வரவழைத்து, தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே, தாராபு ரம் வருவாய் கோட்டாட்சியர் ஃபெலிக்ஸ் ராஜா, காங்கேயம் வட்டாட்சியர் மோகனன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகி யோர் உடனிருந்தனர்.
