திய பத்திரப்பதிவு அலுவலகங்கள் அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார்
கோவை, ஆக.6– பதிவுத்துறை சார்பில் ரூ.4.39 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள கோவை வடக்கு ஒருங்கி ணைந்த பதிவுத்துறை அலு வலகக் கட்டடம் மற்றும் தெற்கு கருமத்தம்பட்யில் புதிதாக உருவாக்கப்பட்ட புதிய சார்பதிவாளர் அலுவ லகம் ஆகியவற்றை வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி புதனன்று திறந்து வைத்தார். சூலூரில் செயல்பட்டு வந்த சார்-பதிவா ளர் அலுவலகம், அதிக கிராமங்களை உள் ளடக்கியதாக இருந்ததால், அதை இரண்டா கப் பிரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று, சூலூர் அலுவலகம் பிரிக்கப்பட்டு, கருமத் தம்பட்டியில் புதிய சார்-பதிவாளர் அலுவல கம் தொடங்கப்பட்டுள்ளது. திறப்பு விழா வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி,மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இன்று நிறைவேறியுள்ளது. முதலமைச்சர் அவர்கள் பெயரில் வரும் திட் டங்கள் அனைத்தும் மக்களுக்குப் பயனுள்ள தாகவே இருக்கும். பத்திரப்பதிவுத்துறை யில் பெண்களுக்கு வழங்கப்பட்ட 1% தள்ளு படி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முத லமைச்சர் பெயரில் வரும் திட்டங்கள் எப்போ தும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்வில், வணிகவரி மற்றும் பதி வுத்துறை செயலாளர் சில்பா பிரபாகர் சதீஷ், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்தி ரன், நகராட்சித் தலைவர் நித்யா மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமைச்சர் திடீர் ஆய்வு அவிநாசியில் 31 கிராம பஞ்சாயத்து, திருப்பூர் ஒன்றியத்தில் ஒரு பகுதி உள்ளடக்கி அவிநாசி பத்திரப்பதிவு அலுவலகம் செயல் பட்டு வருகிறது. இது தமிழகத்தில் அதிக வரு வாய் தரக்கூடிய பத்திரப்பதிவு அலுவலகங்க ளில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.