tamilnadu

img

தந்தை பெரியார் சிறை வைக்கப்பட்ட இடத்தில் நினைவகம்

தந்தை பெரியார் சிறை வைக்கப்பட்ட இடத்தில் நினைவகம்

ஆழப்புழா, செப்.26- ஆலப்புழா மாவட்டம், சேர்த் தலா வட்டம், அரூக்குற்றியில் வைக் கம் போராட்டத்தில் தந்தை பெரியார் முதன்முதலாக சிறைவைக்கப்பட்ட இடத்தில் ரூ.3.99 கோடி மதிப்பீட் டில் தந்தை பெரியார் நினைவகம் அமைக்கும் பணிக்கு வெள்ளியன்று அடிக்கல் நாட்டப்பட்டது. கேரளம் மாநிலம், ஆலப்புழா மாவட்டம், சேர்த்தலா வட்டத்தில் வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு முதன் முதலாக அரூக்குற்றியில் சிறை வைக்கப்பட்டார். அந்த இடத்தில், தமிழக அரசின் சார்பில், ரூ.3.99 கோடி மதிப்பீட்டில்  தந்தை பெரி யார் நினைவகம் அமைக்கும் பணி  துவங்கப்பட்டுள்ளது. வெள்ளி யன்று இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.  இந்நிகழ்விற்கு, கேரள மீன் வளம், கலாச்சாரம் மற்றும் இளை ஞர் நலன் துறை அமைச்சர் சஜி செரி யான் தலைமை ஏற்றார். இதில், தமி ழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் வர் கீஸ், அரூர் சட்டமன்றத் தொகுதி உறுப் பினர் தலீமா ஜோ ஜோ, கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.செந்தில்அண்ணா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர். இந்நிகழ்வில் கேரள அமைச்சர் சஜி செரியான் பேசுகையில், தந்தை பெரியார் அன்றைய திருவிதாங்கூர்-கொச்சி நாடுகளின் எல்லையில் இருந்த அரூக்குற்றி சிறையில் வைக்கம் சத்தியாக்கிரகத்துக்காகச் சிறையிலடைக்கப்பட்டவர். அவர் தீண்டாமையை உடைக்க செய்த  தியாகத்தின் நினைவுகள் இன்றும் பொருத்தமானவை. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தலைவர் கேரள மண் ணில் சமத்துவத்திற்காக ஆற்றிய இந்தப் பங்களிப்பு, தென்னிந்தியா வின் சமூக-கலாச்சார உறவுகள் மற் றும் பரஸ்பர ஒற்றுமையின் ஆழத் திற்கு சான்றாகும். வைக்கம் சத்தி யாக்கிரகத்தின் நூற்றாண்டு விழாவை இரு மாநில அரசுகளும் இணைந்து கொண்டாடியது. நீதி மற்றும் சமத் துவத்துக்காகப் போராடிய அந்த மாமனிதருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசு அவர் சிறையில் அடைக்கப்பட்ட இடத்தில் ஒரு நினைவுச்சின்னத்தைக் கட்ட எடுத்த முடிவு பாராட்டத்தக்கது. தமிழ்நாடு அரசால் ஒதுக்கப்பட்ட ரூ.4 கோடி நிதியில் அமையவுள்ள இந்த நினைவகத்தில் பெரியார் சிலை, அருங்காட்சியகம், மண்டபம் மற்றும் பூங்கா ஆகியவை இடம் பெறும். கேரள அரசு இதற்காக அரை ஏக்கர் நிலத்தை வரியின்றி  வழங்கியுள்ளது. இந்த நினைவுச்சின் னம் வரும் தலைமுறைக்கு சமத்து வத்தின் முக்கியத்துவத்தை உணர்த் தும், என்றார். செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பேசுகையில், சமூக நீதிக் காகப் போராடிய தந்தை பெரியார்,  மகாத்மா காந்தி-யின் ஆணைக்கி ணங்க வைக்கம் போராட்டத்தில் ஈடு பட்ட காரணத்தினால் சிறைவைக்கப் பட்ட இந்த இடத்தை நினைவுபடுத் தும் வகையில், தமிழக முதல்வர், அரூக்குற்றில் ஒரு நினைவகம் கட் டப்படும் என்று அறிவித்தார். வைக் கம் போராட்டம் வெற்றியின் நூற் றாண்டு விழாவை முன்னிட்டு, ஏற்கெ னவே வைக்கத்தில் தமிழ்நாடு அர சின் சார்பில் கட்டப்பட்டுள்ள பெரி யார் நினைவகம் ரூ.8.14 கோடி செல வில் புதுப்பிக்கப்பட்டு, நூலகம் ஒன் றும் கட்டி திறந்து வைக்கப்பட்டுள் ளது. அதன் தொடர்ச்சியாகவே, செய் தித்துறையின் சார்பில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித் துறை யின் மூலம் கட்டப்படும் இந்த நினை வகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட் டுள்ளது என்றார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், தாழ்த்தப் பட்டவர்கள் கோவில் வீதிகளில் நடக் கக்கூட உரிமை மறுக்கப்பட்ட சூழ லில், கேரள காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தை தொடங்கினர். தலைவர் கைது செய்யப்பட்டதும், சிறையிலிருந்தே ஜார்ஜ் ஜோசப்பும், குரூர் நீலகண்ட நம்பூதிரியும் தந்தை  பெரியாருக்குக் கடிதம் எழுதினர். கடிதம் கிடைத்தவுடன் பெரியார் வைக்கத்திற்கு புறப்பட்டுச் சென்று போராட்டத்திற்கு தலைமை ஏற் றார். இதன் காரணமாக, பெரியார் 22.4.1924 அன்று ஒருமாத தண்டனை பெற்று முதன்முதலாக இந்த அரூக் குற்றி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் விடுதலையான அவர் நாடு  கடத்தல் உத்தரவையும் மீறி போரா டியதால், மறுபடியும் கைது செய்யப் பட்டு ஆறு மாதம் கடுங்காவல் தண் டனை விதிக்கப்பட்டார். தீண்டாமை ஒழிப்புக்காக இந்தியாவில் முதன் முதலாக வெற்றி பெற்ற வைக்கம்  போராட்டத்தினாலேயே தந்தை பெரியார் அவர்களுக்கு “வைக்கம் வீரர்” என்ற பெயர் நிலைத்துவிட்டது. அவர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக 7 முறை கேரளாவிற்கு வந்துள்ளார், 141 நாட்கள் தங்கியிருந்து 2 முறை கைது செய்யப்பட்டார். தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, பெரியார் முதல் முறை கைது செய்யப்பட்டு அடைக் கப்பட்டிருந்த இந்த அரூக்குற்றி சிறை தற்போது தந்தை பெரியார் நினைவகமாக மாற்றம் செய்யப்படு கிறது, என்றார்.