‘எல்லா மொழிகளும் வாழட்டும், என் தமிழே என்னை ஆளட்டும்’
ஈரோடு, ஆக.12– ஈரோடு புத்தக திருவிழாவில், நாள்தோறும் சிந்தனையரங்கத்தில் பல்வேறு தலைப்புகளின் அறிஞர்கள், இலக்கியவாதிகள் சொற்பொழி வாற்றினர். இதன்தொடர்ச்சி யாக, சிந்தனையரங்கத் தில் “தமிழருக்கில்லை தமிழ்” என்ற தலைப் பில் பாவலர் அறிவுமதி பேசினார். அவர் தனது பேச்சில், வரலாற்று எச்சங்களைப் பாது காப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். நாம் அனைவரும் தமிழர், அதே சமயம் உலகத்தவர். அனைத்து உயிர் களையும் சமமாகப் பார்த்தது தமிழ்மொழி. அதன் பண்பாட்டு எச்சங்களைப் பற்றிப் பேசுகை யில், இளம்பிறை என்பதை சங்கத் தமிழன் ‘குழவி திங்கள்’ என்றழைத்ததையும், அம்மிக் குழவிக்கு ‘அம்மாவின் மார்பில் உருளும் குழந்தை’ எனப் பெயரிட்டதையும் சுட்டிக்காட்டி னார். தமிழ்நாட்டில் வாழும் மக்களை சாதிகள் என்று அழைப்பது தவறு என்றும், அவர்கள் இனக்குழுக்களாகவே வாழ்ந்தனர் என்றும் கூறினார். அந்தக் குழுக்களின் வரலாற்றை, அதன் எச்சங்களைச் சேமிக்கத் தவறினால், மற்ற வர்கள் நம்மை ஆள நேரிடும் என்றார். இன்றைய நவீன உழவு கருவிகள் உழைப்பாளிகள் தேவை யில்லை எனும்போது, நமது வேளாண்மைப் பண்பாட்டில் பணம் பணக்காரத் தனம் புகுந்து விட்டதாகவும் வேதனை தெரிவித்தார். குழந்தை எழுத்தாளர்கள், காக்கையை ஏமாற்றுபவனாகவும், நரியை வஞ்சகம் உள்ள தாகவும் எழுதுவதை நிறுத்த வேண்டும் என்றார். ஒரு இனத்தின் மீது ஒரு அடையாளத்தைத் திணிப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை ஐங்குறுநூறு சுட்டிக்காட்டுவதாகவும் குறிப்பிட் டார். அசோகன் நிழலுக்காக மரம் நட்டான், ஆனால் தமிழன் உயிர் வாழ மரம் நட்டான். எல்லா மொழிகளும் வாழட்டும், என் தமிழே என்னை ஆளட்டும் என பாவலர் அறிவுமதி தனது உரையை நிறைவு செய்தார். புத்தக வாசிப்பின் பயன்கள் இதேபோன்று, தமிழ் நாடு இணையக் கல்விக் கழக நெறியாளர் செந் தலை கவுதமன் புத்தக வாசிப்பின் முக்கியத்து வத்தை வலியுறுத்தி பேசினார். மேலும், அவர் பேசுகையில், பொதுவாக அறிந்திருக் கும் செய்திகளுக்குள் புதைந்திருக்கும் புதுமை களைக் கண்டறிய புத்தகங்கள் உதவும் என்று குறிப்பிட்டார். புத்தகங்களைப் படிக்கும் பழக் கம் உள்ளவர்களுக்கு உணர்ச்சி சார்ந்த நோய் கள் வராது. புத்தக வாசிப்பு என்பது ஒரு சுயநலம் என்றும், 25 வயதுக்குள் குழந்தைகளிடம் இந்தப் பழக் கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், அதற்கு பெற்றோர்களும் புத்தகங்கள் படிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். புத்தகக் கண்காட்சி கள் நோயைத் தீர்க்கும் மருத்துவமனைகள் அல்ல, மாறாக நோய் வராமல் தடுக்கும் மருத்து வமனைகள் என்று அவற்றை வர்ணித்தார். படிப்பதும், முடிந்தால் எழுதுவதும் முக்கியம். எழுதுவதற்கு ஒன்றுமில்லை என்றால், நாட் குறிப்பு எழுதுவதாவது செய்யலாம். வெள்ள ஓடை வெள்ளோடாக மாறியதை யும், சின்ன ஓடை சித்தோடாக மாறியதையும் நினைவு கூர்ந்த அவர், அறிவு செல்வம் இங்கே கொட்டிக்கிடக்கிறது என்றார். பண்டைய தமி ழர்கள் ஆடிப் பெருக்கின்போது ஓலைச்சுவடி களை ஆற்றில் விடுவதைப் புண்ணியமாகக் கருதியதால், நிறைய நூல்கள் அழிந்துபோன தைச் சுட்டிக்காட்டினார். அப்படி ஆற்றில் விடப் பட்ட பத்துப்பாட்டை ஆற்றில் பாய்ந்து எடுத்தவர் உ.வே.சாமிநாத அய்யர் எனப் பெருமைப்ப டுத்தினார். அழியப் போகும் மொழிகளின் பட்டியலில் தமிழ் 12வது இடத்தில் இருப்பதாகவும், ஏனெ னில் பேச்சிலும் பெயரிலும் தமிழ் இல்லை என்றும், புழக்கத்தில் தமிழ் குறைந்து வருவதாக வும் வருத்தம் தெரிவித்தார். தமிழில் பேசுவ தால்தான் சிந்தனை வேலை செய்யும் என்று வலி யுறுத்தினார். உலகில் அழிந்து போன மொழி கள் உயிர்த்தெழுந்து வரும் நிலையில், உயி ரோடு இருக்கும் தமிழ் அழிந்து கொண்டி ருப்பதாக வேதனை தெரிவித்தார். இரண்டு சொற்கள் பேசினால் அதில் ஒரு சொல் ஆங்கிலத் தில் இருக்கும் அளவிற்கு நிலைமை மாறியுள் ளது என்றும் கவலை தெரிவித்தார்.
குழந்தைகளிடம் கதை சொல்லுங்கள்
பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற விஷ்ணுபுரம் சரவணன் பேசுகையில், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கையின் இரண்டு முக்கிய விஷயங்கள் என்னவென்றால், செல்போன்கள் காரணமாக மாணவர்களின் கவனச்சிதறலைக் கட்டுப்படுத்தவும், மாணவர்களிடையே கலைகளை ஊக்குவிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்பதாகும். தற்போது மாண வர்கள் இன்ஸ்டாகிராமை அதிகம் பயன்படுத்துகின்றனர். யுனெஸ்கோ ஆய்வுப்படி, 73 விழுக்காடு மாணவர்கள் தங்கள் உடல் மற்றும் முகத்தினால் அதிருப்தி அடைகிறார்கள். எனவே, அவர்கள் மற்றவர்களை ஈர்க்க பல விஷயங்களைச் செய்கிறார்கள். எனவே, படிப்பின் மீதான ஈர்ப்பு குறைகிறது. 16 முதல் 20 வயது வரை, மாணவர்கள் அதிக வளர்ச்சியைப் பெறுகிறார்கள். அந்த வயதில் அவர்கள் கஞ்சாவுக்கு அடிமையானால், அவர்கள் அதை நிறுத்த மாட்டார்கள். இது தனிநபர்களின் பிரச்சனை அல்ல, சமூகத்தின் பிரச்சனை. கதைகளைக் கேட்கும் குழந்தைகள் தங்கள் படிப்பிலிருந்து திசைதிருப்ப முடியாது என்று ஆஸ்திரேலிய ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கதைகளைச் சொல்லி, அவர்களின் அறிவுசார் திறனை மேம்படுத்த வேண்டும். கதைகளைச் சொல்வது அவர்களின் கற்பனை சக்தி, படைப்பாற்றல், அவர்களின் மனதில் உள்ள தார்மீகக் கருத்துக்களை மேம்படுத்தும். மேலும் அவர்களை வித்தியாசமாக சிந்திக்க ஊக்குவிக்கும். கதைகள் நம் சமூகத்துடன் தொடர்புடையவை என்பதால், கதை சொல்வது மூலம் அல்லது நல்ல புத்தகங்களை குழந்தைகளை தந்து அவர்களை நல்ல குடிமக்களாக மாற்ற வேண்டும், என்றார்.