tamilnadu

img

அவிநாசி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் தர்ணா

அவிநாசி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் தர்ணா

அவிநாசி, ஜூலை 29- அவிநாசி அரசு மருத்துவம னையை தரம் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று தர்ணாவில் ஈடுபட்டனர். அவிநாசி நகரை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும்  விபத்து மற்றும் அவசர சிகிச்சை களை மேற்கொள்ள 24 மணி நேர மும் செயல்படும் அவசர சிகிச்சை பிரிவை அவிநாசி அரசு மருத்துவம னையில் உடனடியாக துவங்க வேண் டும். கூடுதல் மருத்துவர்கள் செவி லியர்கள் நியமிக்கவும், காலை, மாலை நேரங்களில் அனைத்து தரப்பு மக்களும் சிகிச்சை பெற மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும். எக்ஸ்ரே, ஸ்கேன், ரத்த பரிசோதனை உள்பட அனைத்து உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்த வேண்டும். அனைத்து உபகரணங் களுடன் கூடிய ஆய்வகம் மற்றும்  தொழில்நுட்ப அலுவலர்கள் நியம னம் செய்து 24 மணி நேரமும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வும், பிரேத பரிசோதனை கூடத்தை குளிர்சாதன வசதியுடன் வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண் டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று தர்ணாவில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்ற தர்ணாவிற்கு, கட்சி யின் ஒன்றியக்குழு உறுப்பினர் வி. தேவி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.நந்தகோ பால், ஒன்றியச் செயலாளர் ஈஸ்வர மூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.பழனிச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சண்முகம், வேலு சாமி, மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் மணிகண்டன், சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழி யர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.பழனிச்சாமி, வாலிபர் சங்க ஒன் றியச் செயலாளர் வடிவேல், கட்டு மானத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.