பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கட்சியினர் காத்திருப்புப் போராட்டம்
நாமக்கல், ஜூலை 24- வட்டாட்சியரின் உத்தரவாதத் தின்படி, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என வலி யுறுத்தி, நாமகிரிப்பேட்டை வரு வாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், தொப்பப்பட்டி ஊராட்சியில் பட்டியலின மக்கள் அதிகளவில் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலை யில், தங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கக்கோரி மாவட்ட ஆட் சியர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடமும், ஜமா பந்தி மற்றும் கிராம சபை கூட் டங்களிலும் பலமுறை மனு அளித் தும் இதுவரையும் எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. தொப் பப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சர்வே எண்கள்: 38/1, 38/2, 38/1 பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. ஆக்கிரமிப்பாளர்களிட மிருந்து அரசு புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்தி, வகை மாற்றம் செய்து வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு வழங்க வேண் டும் என்று தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் வலியுறுத்தினர். மேற்கண்ட மக்களுக்கு உடனடியாக இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண் டும் என வலியுறுத்தி, கடந்தாண்டு அக்.18 ஆம் தேதியன்று நடைப் பயணம் மற்றும் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித் தது. இதைத்தொடர்ந்து ராசிபுரம் வட்டாட்சியர், கடந்தாண்டு அக்.17 ஆம் தேதியன்று மாலை போராட் டக்குழு மற்றும் பயனாளிகளை அழைத்து பேசி, மூன்று மாத காலத் திற்குள் தகுதியான உண்மையான பயனாளிகளை கண்டறிந்து இல வச வீட்டுமனைப்பட்டா வழங்கப்ப டும் என்று எழுத்துப்பூர்வமாக உறு தியளித்தார். அதன் பெயரில் போராட்டம் தற்காலிகமாக கைவி டப்பட்டது. இதற்கிடையே எழுத் துப்பூர்வமாக கொடுக்கப்பட்ட உத் தரவாத காலம் முடிவடைந்து, ஆறு மாதங்களாகியும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. எனவே, உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தி நாமகிரிப்பேட்டை வரு வாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு வியாழனன்று தொடர் காத் திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கட்சியினர் அறி வித்தனர். இச்சூழலில் போராட்ட குழுவினருடன் ராசிபுரம் வட்டாட்சி யர் சேசு குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் மூன்று கிராம நிர் வாக அலுவலர்கள் மற்றும் நில அளவையர், வருவாய் ஆய்வா ளர் ஆகியோர் கொண்ட குழு பொருத்தமான இடத்தை கண்ட றிந்து, வட்டாட்சியரிடம் அறிக் கையை புதனன்று மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ராசி புரம் வட்டாட்சியர் அறிவுறுத்தி னார். அதனடிப்படையில் வட்டாச்சி யர் அமைத்த குழுவினர் தரிசு நிலங்களை ஆய்வு செய்து ராசிபு ரம் வட்டாட்சியரிடம் விவரங்களை சமர்ப்பித்தனர். மேலும், வியாழ னன்று சம்பந்தப்பட்ட இடத்தில் ராசி புரம் வட்டாட்சியர் மற்றும் தலைமை நில அளவையாளர் ஆகி யோர் ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், பட்டா வழங்கினால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என தெரிவித்து, மார்க்சிஸ்ட் கட்சியின் தொப்பப்பட்டி கிளைச் செயலா ளரும், ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவருமான இ.குப் பண்ணன் தலைமையில் நாமகிரிப் பேட்டை வருவாய் ஆய்வாளர் அலு வலகம் முன்பு 100க்கும் மேற்பட் டோர் தொடர் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினர். தகவலறிந்து வந்த வட்டாட்சி யர் சேசு குமார், காவல் ஆய்வாளர் அம்பிகா, வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தாங்கள் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவதற் கான நிலங்களை அடையாளப்ப டுத்தி உள்ளோம். சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு ஒரு மாத காலத் திற்குள் தகுதியின் அடிப்படையில் பட்டா வழங்கப்படும் என்று எழுத் துப்பூர்வமாக வட்டாட்சியர் உறுதி யளித்தார். அதன்பேரில் போராட் டம் தற்காலிகமாக கைவிடப்பட் டது. இந்த போராட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. டி.கண்ணன், மாவட்டக்குழு உறுப் பினர் பி.செல்வராஜ், ஒன்றியச் செயலாளர் வி.பி.சபாபதி, ஒன்றி யக்குழு உறுப்பினர் பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, ஆக.19 ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பட்டா கேட்டு காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும். இதில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி பங்கேற்கவுள்ளார். அதற்குள் பட்டா வழங்க வேண்டும் என போராட்டக்காரர்கள் தெரி வித்தனர்.