tamilnadu

img

ஆண் சிறுத்தை உயிரிழப்பு

ஆண் சிறுத்தை உயிரிழப்பு

உதகை, ஆக.31- குன்னூர் அருகே வெலிங்டன் தேயிலை எஸ்டேட் டில் ஆண் சிறுத்தை உயிரிழந்தது குறித்து வனத்துறையி னர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், கட்டபெட்டு வனச்சரகத்திற்குட் பட்ட சின்ன வண்டிசோலை, வெலிங்டன் தனியார்  தேயிலை எஸ்டேட் பகுதியில் சிறுத்தை ஒன்று இறந் திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.  அதன்பேரில் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அதில் உயிரிழந்தது சுமார் 5 வயது ஆண் சிறுத்தை என்பதும், காயத்துடன் இறந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஞாயிறன்று சிறுத்தையின் உடலை மீட்டு,  என்டிசிஏ வழிகாட்டுதலின்படி, உதவி வனப்பாதுகாவ லர் ஆ.மணிமாறன் தலைமையில், முதுமலை புலிகள்  காப்பக உதவி வன கால்நடை மருத்துவர் கே.ராஜேஷ் குமார் மற்றும் எடப்பள்ளி உதவிகால்நடை மருத்துவர்  விக்னேஷ், ஆகியோர் கொண்ட குழுவினர் பிரேத பரி சோதனை செய்தனர். முதற்கட்ட ஆய்வில், வன விலங்கு களால் ஏற்பட்ட மோதல் காரணமாக இறந்துள்ளது என்று  தெரிவிக்கப்பட்டது. மேலும், உடற்கூறாய்வு மாதிரி கள் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பும் பொருட்டு, உடற்பாக மாதிரிகள் எடுக்கப்பட்டு பின் அனைவரின் முன்னிலையில் சிறுத்தையின் உடல் எரி யூட்டப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் அப்பகுதி யில் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.