tamilnadu

img

காலமானார்

 மதுரை, அக்.10-  மதுரை தத்தனேரி மெயின் ரோடு, அருள்தாஸ்புரம் பகுதியைச் சேர்ந்த ராஜம்மாள் (எ) ராஜாத்தி (வயது 82) அவர்கள் அக்டோபர் 10 அன்று காலமானார். இவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் ஜா.நரசிம்ம னின்  தாயார் ஆவார்.  அன்னாரது மறைவுச் செய்திய றிந்து கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், தீக்கதிர் மூத்த துணை ஆசிரியர் ப.முருகன், மதுரை பதிப்பு பொது மேலாளர் ஜோ.ராஜ்மோகன், மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பி னர்கள், பகுதிக்குழு செயலாளர்கள், மாதர் சங்கம்,  வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் உள்ளிட்டு பல்வேறு அமைப்புகளின் சார்பில் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இறுதி நிகழ்ச்சி அன்று மாலை 5 மணிக்கு மேல் தத்தனேரி மயானத்தில் நடைபெற்றது.