tamilnadu

img

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பிஆர்சிசி நிறுவனம்

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பிஆர்சிசி நிறுவனம்

அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

உதகை, ஜூலை 30 – சட்டத்திற்கு புறம்பாக இயங் கும், பிஆர்சிசி தார் கலவை ஆலை காரணமாக பொதுமக்களின் உயி ருக்கும், உடைமைக்கும் அச்சுறுத் தல் ஏற்பட்டிருப்பதாக அனைத் துக் கட்சியினர் குற்றம்சாட்டினர். நீலகிரி மாவட்டம், நெல்லியா லம் நகராட்சிக்குட்பட்ட தேவாலா வில், பிஆர்சிசி என்கிற தார் கலவை ஆலை இயங்கி வருகிறது. குடியி ருப்புகள் அதிகம் உள்ள இந்த பகுதியில், இந்த ஆலை வெளி யேற்றும் நச்சுப்புகையால், பொது மக்கள் மற்றும் குழந்தைகளுக்கு புற்றுநோய், சுவாசக் கோளாறுகள் மற்றும் குழந்தைகளுக்கு ஒவ் வாமை போன்ற பல்வேறு நோய்க ளால் மக்கள் பாதிக்கப்பட்டு வரு கின்றனர். மேலும், இந்த ஆலை யின் செயல்பாடுகளால் இதுவரை ஒன்பதுக்கும் மேற்பட்டோர் உயிரி ழந்திருப்பதாக கூறுப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி  மக்கள் அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். இருந்தபோதி லும், அதிகாரிகள் கண்டுகொள்ள வில்லை. இந்நிலையில், திங்க ளன்று, காலை 11 மணியளவில், ஆலையின் உள்ளே மலைபோல் குவிக்கப்பட்டிருந்த ஜல்லிக் கற் கள், பாரம் தாங்காமல் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் அருகிலிருந்த 9 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளது. இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவ லறிந்ததும், மார்க்சிஸ்ட் கட்சியினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு  ஆறுதல் தெரிவித்து, உரிய நிவார ணத்தை பெற்றுத்தருவோம் என் கிற நம்பிக்கையை அளித்தனர். இதன்தொடர்ச்சியாக, இந்நிறு வனத்தை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும். வீடுகள் இடிந்து பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளின் சார்பில் தேவாலா பகுதி யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தை மார்க்சிஸ்ட கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் துவக்கிவைத்து உரையாற்றினார். இதில், சிபிஎம் சார்பில், இராசி இரவிக்குமார், ராம னுஜம் (அதிமுக), அனஸ் எடலத் (காங்கிரஸ்), தீபக் ராம் (பாஜக), சகாதேவன் ராஜேந்திர பிரபு (விசிக), முருகன் (சிபிஐ). முஜீப் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) உள்ளிட்டோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான பொது மக்கள் பங்கேற்றனர்.