tamilnadu

img

எல்ஐசி முகவர்கள் சங்க கிளை மாநாடு

எல்ஐசி முகவர்கள் சங்க கிளை மாநாடு

அவிநாசி, ஆக.3- எல்ஐசி முகவர்கள் சங்க அவிநாசி கிளை மாநாட்டில் நிர் வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்க அவிநாசி கிளை  மாநாடு, பயிற்சிக் கருத்தரங்கம் சனியன்று அவிநாசியிலுள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. சங்கத்தின் கொடியினை கோவை கோட்டத் தலைவர் பிரேம்குமார் ஏற்றி வைத்தார்.  மாநாட்டிற்கு சங்கத்தின் கிளைத் தலைவர் சி.பழனிச்சாமி தலைமை வகித்தார். கோவை கோட்டச் செயலாளர் கோவர்த் தனன் துவக்கவுரையாற்றினார். கிளைச் செயலாளர் கோதண் டம், பொருளாளர் சுப்பிரமணியம் ஆகியோர் அறிக்கை களை முன்வைத்தனர். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் முத் துசாமி, பொதுத் தொழிலாளர் சங்க செயலாளர் ஈஸ்வர மூர்த்தி, முகவர்கள் சங்க மாநில கல்விக்குழு தலைவர் ராஜேஷ், அவிநாசி கிளை மேலாளர் பாரதி, அன்னூர் கிளை  மேலாளர் காளியப்பன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.  இம்மாநாட்டில், வாடிக்கையாளர் செலுத்தும் பிரீமியத்தின்  மீது விதிக்கின்ற ஜிஎஸ்டி-யை ரத்து செய்ய வேண்டும், உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, ‘விற்பனை வர்த்தகம்’ என்ற தலைப்பில் அமைப் பின் மாநிலச் செயலாளர் குமார் உரையாற்றினார். தொடர்ந்து  சங்கத்தின் கிளைத் தலைவராக பழனிச்சாமி, செயலாளராக  கோதண்டம், பொருளாளராக சம்பத்குமார் தேர்வு செய்யப் பட்டனர். சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் கணேசன் நன்றி  கூறினார்.