சமுதாய நல்லிணக்கத்தை பாதுகாக்க கைகோர்ப்போம்
திருப்பூர், செப்.22- தமிழ்நாட்டில் உள்ள சமுதாய நல்லி ணக்கத்தை பாதுகாக்க வேண்டும் என மதத்தால் பிரிந்தாலும், மனதால் இணை வோம் பொதுக்கூட்டத்தில் வலியுறுத் தப்பட்டது. இந்த பொதுகூட்டத்தில், திருப்பூர் டிஇஎல்சி ஆயர் ஜெ.ஸ்டான்லி தேவகு மார் பேசுகையில், இங்கே கடவுள் மறுப்பாளர்களும் கடவுள் நம்பிக்கை யாளர்களும் ஒரே மேடையில் அமர்ந்தி ருக்கிறோம். இதுதான் இந்தியா! மருத் துவமனையில், குழந்தை பிறந்திருக்கி றது என்றுதான் அனைவரும் சொல்வார் கள். பிறந்த குழந்தை இந்த சாதி, இந்த மதம் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் ஆர் எஸ் எஸ் சமுதாய நல்லி ணக்கத்தை வேர் அறுத்து கற்காலத்தை நோக்கி அழைத்துச் செல்ல பார்க்கி றது. இவ்வாறு அவர் கூறினார். திருமுருகநாதசாமி திருமடம் சுந்தர ராசு அடிகளார் பேசும்போது, காம நாயக்கன் பாளையம் அருகே விபத்தில் சிக்கிய முஸ்லிம் சகோதரர் அவரது மனைவி, குழந்தை ஆகியோரை எமது வாகனத்தில் வைத்து பல்லடம் மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தோம். அப் போது மதத்தை பார்க்கவில்லை, மனி தத்தை தான் பார்த்தோம். அகில இந்திய அளவில் தமிழகத்தில் தான் மதச் சண்டை இல்லை. அதேசமயம் தமிழ் நாடு சைவர்கள் சங்கம் என்று இருந் ததை பாரதிய சன்னியாசிகள் சங்கம் என மாற்றி தமிழ் நாட்டை நீக்கி விட்டனர். இஸ்லாமியர் தனது கிரேன் நிறுவனத்திற்கு வள்ளலார் கிரேன் சர் வீஸ் என பெயர் வைத்துள்ளார். தனது வருமானத்தில் 10 சதவிகிதத்தை வள்ள லார் அமைப்பிற்கு வழங்கி வருகிறார். இந்த சமுதாய நல்லிணக்கத்தை பாது காக்க வேண்டும், என்றார். திருப்பூர் என்.எஸ்.ஜே.எம். பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் சல்மான் பாரிஸ் பாகவி பேசுகையில், இந்தியா மதச்சார்பின்மை சமத்துவம் சமூக நீதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நாடு. ஆனால் இவை தற் போது ஆபத்தான சூழலில் ஐ.சி.யு. வார் டில் அனுமதிக்கப்பட்டுள்ளது. நம் இந்திய தேசம் உலகில் வேறு எங்கும் காணாத தனித்துவம் தனித் தன்மை கொண்டது. இங்குள்ள பன் மைத்தன்மை உலகில் வேறு எங்கும் இல்லை. அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியல் சாசனம் என்பதை அச்சாணி யாக கொண்டு இந்த தேசம் ஓடிக்கொண் டிருக்கிறது. பிரித்தாலும் சூழ்ச்சியுடன் செயல்படும் சக்திகளுக்கு எதிராக நாம் ஒன்றாக செயல்பட வேண்டியது காலத் தின் கட்டாயம் என்று கூறினார். நிகழ்ச்சியில் பேசிய மேயர் ந.தி னேஷ்குமார் கூறுகையில், மத்தியில் ஆளும் பாசிச சக்திகள் மக்களை மதத் தால் பிரித்து அவர்களது கருத்தை அமைப்பாக மாற்ற முயல்கின்றனர். தமிழ்நாட்டில் என்றைக்கும் அவர்க ளுக்கு இடம் இல்லை, என்று கூறி னார். நவீன மனிதர்கள் அமைப்பின் தலை வர் பாரதி சுப்பராயன் நோக்க உரை ஆற்றினார். அப்போது இங்கே முறை யாக அனுமதி பெற்று மசூதி சர்ச் கட்டு வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு பொதுமக்கள் சிலரது ஆதரவும் உள்ளது. தமிழர்களாகி நாம் அறம் தவறி நடக்கக் கூடாது. துன்பத்தில் இருப்பவர்களை காப்பாற்றுவதுதான் மனிதநேயம். பகுத்தறிவுவாதிகளுக்கு மனிதநேயம் தான் உச்சம். சங்பரிவார் அமைப்புகள் விஷ விதை தூவி வரு கிறார்கள். திருப்பூரில் ஒற்றுமை தான் முக்கியம், அன்பு தான் முக்கியம், என்ப தற்கான தான் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம் என்று அவர் கூறினார். முன்னதாக நவீன மனிதர்கள் அமைப்பின் சிட்டி கணேசன் வரவேற் றார். மதத்தால் பிரிந்தாலும் மனதால் இணைவோம் என்று நவீன மனிதர்கள் அமைப்பினர் உறுதிமொழி ஏற்றனர். அத்துடன் மத நட்புறவை வலியுறுத்தும் விதத்தில் அனைவரும் செல்போனில் டார்ச் அடித்து ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். முடிவில் இந்த அமைப்பைச் சேர்ந்த வே.சுரேஷ் நன்றி கூறினார்.