போர்களற்ற உலகை உருவாக்குவோம்!
மார்க்சிஸ்ட் கட்சியினர் உறுதிமொழியேற்பு
கோவை, ஆக.9– ‘போர்களற்ற உலகை உரு வாக்குவோம்’ என்கிற முழக் கத்தை முன்வைத்து, கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் உறுதிமொழி எடுத்துக் கொண்ட னர். ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆம் தேதி களில் ஜப்பானில் அணு குண்டு வீசப்பட்ட நினைவு நாளை அனு சரிக்கும் வகையில், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் உறுதிமொழி யேற்பு நிகழ்வு சனியன்று நடை பெற்றது. கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட் டக்குழு அலுவலகத்தில் “போர்க ளற்ற உலகை உருவாக்குவோம்” என்ற முழக்கத்துடன் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிபிஎம் மாநில செயற்குழு உறுப் பினர் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட் டச் செயலாளர் சி.பத்மநாபன், மாநி லக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே. அஜய்குமார், கே.மனோகரன், கே. எஸ்.கனகராஜ், ஆர்.கோபால், வி.ஆர்.பழனிச்சாமி, ஆறுச்சாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர். முன்னதாக, மனிதகுலத்தை நாசமாக்கும் அணு ஆயுதங்களை ஒழிப்போம், ஏகாதிபத்திய நாடுக ளின் போர் வெறியை எதிர்ப்போம், போர்களற்ற உலகை உருவாக்கு வோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இது குறித்து பேசிய சி.பி.எம் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் கூறுகையில், இரண் டாம் உலக போர் முடிவுக்கு வரும் நிலையில் இருந்த போது ஆயுத விற்பனைக்காக ஜப்பான் மீது அணு குண்டுகள் வீசப்பட்டு பேர ழிவு நடந்தது. சுமார் 2.5 லட்சம் பேர் உயிரிழந்தனர், இன்றளவும் பாதிப் புள்ளது. அணு ஆயுதம் மனித இனத் திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே இன்றைய தினம் அணு ஆயு தத்தை எதிர்த்தும், போர் வேண் டாம் என வலியுறுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். மேலும் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீதான போரை நிறுத்த வேண்டும். ரஷ்யா உக்ரைன் மீதான போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்து கிறோம், என்றார்.