tamilnadu

img

தலைமை நீதிபதி மீது தாக்குதல் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

தலைமை நீதிபதி மீது தாக்குதல் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, அக்.7- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி  மீது காலணி வீசி தாக்குதல் நடத்த  முயன்ற சம்பவத்தை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி  பி.ஆர்.கவாய் பட்டியலிடப்பட்ட வழக்குகளை விசாரணை நடத்தி  வந்த நிலையில் அங்கிருந்த வழக்கறி ஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் திடீ ரென அவரது காலணியை கழற்றி  தலைமை நீதிபதியை நோக்கி வீச முற் பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இச்சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, செவ்வாயன்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங் கம் சார்பில் நாடு முழுவதும் நீதி மன்றங்கள் முன்பு ஆர்ப்பாட்டங் கள் நடைபெற்று வருகிறது. அதன்  ஒரு பகுதியாக கோவை ஒருங் கிணைந்த நீதிமன்ற வளாக நுழை வாயில் முன்பும் அகில இந்திய வழக் கறிஞர்கள் சங்க மாவட்டச் செய லாளர் ஜோதிகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநி லப் பொருளாளர் மாசேதுங், மாநிலக்  குழு உறுப்பினர் எஸ்.ராஜசிம்மன், மாவட்ட துணைத் தலைவர் கோபால்  சங்கர், துணைச் செயலாளர் ஆறுச் சாமி, பியூசிஎல் பொதுச் செயலாளர்  பாலமுருகன், வழக்கறிஞர் வெண் மணி உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.