tamilnadu

img

ஐடி நிறுவனங்களில் தொழிலாளர் பாதுகாப்பு சட்டம்

ஐடி நிறுவனங்களில் தொழிலாளர் பாதுகாப்பு சட்டம்

வாலிபர் சங்க மாநாடு வலியுறுத்தல்

கோவை, ஆக.26- ஐ.டி நிறுவனங்களில் தொழிலா ளர் பாதுகாப்பு சட்டத்தினை அமல் படுத்த வேண்டும் என இந்திய ஜன நாயக வாலிபர் சங்க கோவை  மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப் பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் கோவை மாவட்ட 20 ஆவது மாநாடு ஞாயிறன்று பேரணியுடன் துவங்கியது. பின்னர் தெப்பக் குளம் மைதானத்தில் “சகோதரத் துவமான கோவை, சமூக பாது காப்பான வேலை” என்ற முழக் கத்துடன் பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதைத்தொடர்ந்து செல்வபுரம் சாலை அசோக் நகர் பகுதியில் உள்ள யு.கே சிவஞா னம் நினைவரங்கத்தில் 20 ஆவது கோவை மாவட்ட பிரதிநிதிகள் மாநாடு திங்களன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு மாவட்டத் தலை வர் எம்.விவேகானந்தன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ஏ. வி.சிங்காரவேலன் துவக்கவுரை யாற்றினார். வாலிபர் சங்க மத்தி யக்குழு உறுப்பினர் மணிகண்டன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் உஷா, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.அகமது ஜூல்ஃ பிகர், வாலிபர் சங்க திருப்பூர் மாவட் டச் செயலாளர் கு.பாலமுரளி ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். மாவட் டச் செயலாளர் அர்ஜுன் வேலை அறிக்கையும், பொருளாளர் எம்.தினேஷ் ராஜா வரவு செலவு அறிக் கையும் முன் வைத்தனர். இம்மாநாட்டில் கோவை மாநக ராட்சியின் அனைத்து வார்டுகளி லும் நவீன  விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் பணிபுரி யும் பெண்களுக்கு அரசு மகளிர் விடுதி அமைத்துக் கொடுக்க வேண் டும். கோவை மாநகராட்சியில் சூயஸ் குடிநீர் திட்டத்தை ரத்து செய்து, மாநகராட்சி நிர்வாகமே அதனை செயல்படுத்த வேண் டும். ஐ.டி நிறுவனங்களில் தொழி லாளர் பாதுகாப்பு சட்டத்தினை அமல்படுத்த வேண்டும். கோவை மாவட்ட, தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகள் சிறப்பு பிரிவுகளோடு உருவாக்க வேண் டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவராக ந.ராஜா, செயலாளராக எம்.தினேஷ் ராஜா, பொருளாளராக ஆர்.அர்ஜுன், துணைத் தலைவர்களாக குரு  சாரதி, முத்துமுருகன், துணைச் செயலாளர்களாக தீபிகா, விக் னேஷ் உள்ளிட்ட 21 பேர் கொண்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக் நிறைவுரை யாற்றினார். இதில், மாநிலப் பொரு ளாளர் எஸ்.பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.