காட்டு யானையை கட்டுப்படுத்த கும்கி யானைகள் வரவழைப்பு!
கோவை, செப்.6- தொண்டாமுத்தூரில் விவசாய நிலங் களை சேதப்படுத்தும் ரோலக்ஸ் காட்டு யானையை கட்டுப்படுத்த 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வனப்பகுதியிலி ருந்து வெளியேறிய ரோலக்ஸ் என அழைக் கப்படும் ஒற்றை காட்டு யானை உலா வரு கிறது. இந்த யானை அப்பகுதியில் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி யது. மேலும், அருகில் உள்ள கிராமங்களி லும் புகுந்து வீடுகள் மற்றும் கடைகள் சேதப்படுத்தப்பட்டதுடன், பொது மக்களை யும் தாக்கி வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளும் பொதுமக்களும், ரோலக்ஸ் காட்டு யானையை பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் அனுப்ப வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, பொள்ளாச்சி டாப்ஸ்லிப் யானைகள் முகாமிலிருந்து முத்து மற்றும் நரசிம்மன் என்ற 2 கும்கி யானைகளை வனத்துறையினர் வெள்ளியன்று இரவு தொண்டாமுத்தூர் அருகே தாளியூர் பகுதிக்கு அழைத்து வந்தனர். இக்கும்கி யானைகள் ரோலக்ஸை கண் காணித்து, அது ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தாமல் தடுக்க நடவடிக்கை மேற் கொள்ள உள்ளன. மேலும், யானையை கட் டுப்படுத்த முடியாத சூழ்நிலையில், கும்கிகள் உதவியுடன் மடக்கிப் பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் கொண்டு செல்லும் திட்டமும் வனத்துறையினரால் வகுக்கப்பட்டுள்ளது. ரோலக்ஸை கட்டுப்படுத்த கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டுள்ளதை அப்பகுதி விவ சாயிகளும் பொதுமக்களும் வரவேற்று உள்ளனர்.