பின்னலாடை நூல் விலை கிலோவுக்கு ரூ.5 உயர்வு
திருப்பூர், ஆக.1- பின்னலாடை தயாரிப்புக்குரிய நூல் விலை ஆகஸ்ட் மாதம் முதல் நாளில் கிலோவிற்கு ரூ.5 உயர்த்தப் பட்டுள்ளது. திருப்பூர் பின்னலாடைத் தொழி லுக்கு பிரதான மூலப்பொருளாக பருத்தி நூல் இருக்கிறது. பின்ன லாடை உற்பத்திச் செலவை நிர்ண யிப்பதில் பருத்தி நூல் விலை முக் கிய காரணியாக உள்ளது. இந்நி லையில் ஆகஸ்ட் மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.5 உயர்த்தி நூற்பாலைகள் அறிவித் துள்ளன. அதன்படி 10 ஆம் நம்பர் கோம்டு நூல் ரூ.183, 16 ஆம் நம்பர் ரூ.193, 20 ஆம் நம்பர் கோம்டு நூல் ரூ.251, 24 ஆம் நம்பர் ரூ.263, 30 ஆம் நம்பர் ரூ.273, 34ஆம் நம்பர் ரூ.293, 40 ஆம் நம்பர் ரூ.311, 20 ஆம் நம்பர் செமி கோம்டு ரூ.248, 24 ஆம் நம்பர் ரூ. 258, 30 ஆம் நம்பர் ரூ.268, 34 ஆம் நம்பர் ரூ. 281, 40 ஆம் நம்பர் ரூ.301க்கும் விற்பனை செய்யப் படுவதாக அறிவித்துள்ளனர். இந்த ஆண்டு இந்தியாவில் பருத்தி விளைச்சல் வழக்கத்தை விடக் குறைவாக இருப்பதால், உள் நாட்டு ஜவுளித் தொழிலுக்கு பஞ்சு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பிருக் கிறது. இந்த நிலைமையைக் கணித்து வர்த்தக சூதாடிகள், கிடைக்கக்கூடிய பருத்தியை கைப் பற்றி பதுக்கி வைத்து செயற்கை விலையேற்றம் செய்வதற்கு வாய்ப்புள்ளது. எனவே தொழில் துறை தேவையைக் கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு பருத்தி விலையைக் கண்காணிக்க வேண் டும். அத்துடன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பஞ்சுக்கு விதிக்கப்படும் 11 சதவி கித இறக்குமதி வரியை நீக்கினால், வெளிநாட்டு பஞ்சு இந்திய சந் தைக்கு வரும்போது, பற்றாக்கு றையை சமாளிக்க முடிவதுடன், பஞ்சு விலை உயர்வையும் கட்டுப் படுத்திட முடியும். அதற்கேற்ப ஒன் றிய அரசு தலையிட வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக ஏற்கெ னவே கடந்த ஜூலை மாதத்தில் தொழில் துறையினர் தெரிவித்தி ருந்தனர். இந்த பின்னணியில் ஆகஸ்ட் மாதத்திற்கான நூல் விலை ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது கவனிக்கத் தக்கது. பருத்தி பருவம் ஆகஸ்ட மாதம் வாக்கில் தொடங்கும் நிலை யில் இனி வரக்கூடிய வாரங்களில் பருத்தி வரத்து எப்படி இருக்கும் என்பது தெரியும். கடந்த நிதியாண் டில் திருப்பூரின் ஏற்றுமதி, உள் நாட்டு தொழில் வர்த்தகம் நன் றாக இருந்ததாக பின்னலாடை தொழில் துறையினர் தெரிவித்தி ருந்தனர். இத்துடன் இங்கிலாந்து டன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதும் தங்க ளுக்கு ஏற்றுமதி வாய்ப்பு அதிக ரிக்கும் என்று ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். ஆகவே சாதகமான நிலை இருப்ப தால், நூல் விலையை நிலைத்தன் மையோடு வைத்திருப்பது அவசி யம். இதில் எதிர்பாராத ஏற்றத்தாழ் வுகள் இல்லாமல் கண்காணித்து அரசு உரிய தலையீடு செய்ய வேண் டும் என்று ஜவுளித் துறையினர் கூறினர்.