tamilnadu

img

கிட்னி திருட்டு விவகாரம்: அறுவை சிகிச்சை செய்ய தனியார் மருத்துவமனைக்கு தடை

கிட்னி திருட்டு விவகாரம்: அறுவை சிகிச்சை செய்ய தனியார் மருத்துவமனைக்கு தடை

ஈரோடு, ஜூலை 19- பெருந்துறை சாலையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸ் தவிர பிற அறுவை சிகிச்சை  செய்யத் தடை விதித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி கள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை சாலையில் அபிராமி  கிட்னி கேட் பி.லிட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு  முறையற்ற மற்றும் பாதுகாப்பற்ற முறையில் கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகப் புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் (சென்னை) தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம் 2018 இன் படி அம்மருத்துவமனை செயல்பட வழங்கப்பட்ட அனுமதி  சான்றினை கடந்த ஜூலை 14 ஆம் தேதி தற்காலிகமாக நீக்கி யது. மேலும், அதுகுறித்த உத்தரவில் புதுநோயாளிகள் யாரையும் வெளிநோயாளிகளாகவோ, உள் நோயாளிகளா கவோ மறு உத்தரவு வரும் வரை அனுமதிக்கக்கூடாது என்று தடை விதித்துள்ளது. அத்துடன் அம்மருத்துவமனையின் வேண்டுகோளை ஏற்று அங்கு டயாலிசிஸ் சிகிச்சை பெற் றுவரும் நோயாளிகளின் நலன் கருதி (டயாலிசிஸ் யூனிட்)  சிறுநீரக செயலிழப்பு சிகிச்சைப் பிரிவு மட்டும் தொடர அனு மதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட மருத்துவப்பணிகள் இணை  இயக்குநர் சாந்தகுமாரிடம் கேட்டபோது, அம்மருத்துவ மனையில் டயாலிசிஸ் சிகிச்சை தவிர மற்ற எந்தவித சிகிச்சை யும் மேற்கொள்ள கூடாது என உத்தரவிட்டுள்ளதாக தெரிவித் தார். மேலும், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களில் சிறுநீரக திருட்டு குறித்து மருத்துவமனைகளில் ஆய்வு  மேற்கொள்ளப்பட்டு வருவதாக, கூறினார். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் விசைத்தறித் தொழிலாளர் களிடம் பணத்தாசை காட்டி சிறுநீரகம் திருடுவது குறித்த புகார்  மற்றும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஈரோட்டில்  இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.