கிட்னி விற்பனை: சிறப்புக் குழுவின் முதற்கட்ட விசாரணை துவக்கம்
நாமக்கல், ஜூலை 22- வறுமையை பயன்படுத்தி விசைத்தறி தொழிலாளர்களின் கிட்னி விற்பனை செய்யப்படுவது குறித்து, சிறப்புக் குழுவின் முதற் கட்ட விசாரணை துவங்கப்பட்டுள் ளது. நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி பாளையம், குமாரபாளையம், வெப் படை உள்ளிட்ட பகுதிகளில் நுண் நிதி, கந்துவட்டி உள்ளிட்ட பிரச்சனை களில் சிக்கித் தவிக்கும் விசைத்தறி தொழிலாளிகளை குறிவைத்து கிட்னி விற்பனை சம்பவம் நடைபெற் றது நாடு முழுவதும் அதிர்வலை களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலை யில், தமிழக அரசு சார்பில் இந்த கிட்னி விற்பனை சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் குறித்து விசா ரணை மேற்கொள்ள ஐஏஎஸ் அதி காரி தலைமையில் தனிப்படை அமைக்கப்படும் என அறிவித்ததின் அடிப்படையில், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் வினித், மருத்துவ சட்ட இயக்குநர் மீனாட்சி சுந்தரேசன், துணை காவல் கண் காணிப்பாளர் சீதாராமன் ஆகியோர் கொண்ட சிறப்புக் குழுவினர் செவ்வா யன்று திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சுமார் 3 மணி நேரம் ஆவண சரி பார்ப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து இரண்டு நாட்கள் இந்த ஆவண சரிபார்ப்பு பணிகள் நடை பெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. திருச்செங்கோடு வருவாய் கோட் டாட்சியர் அலுவலகத்தில் மூன்று மணிநேர ஆய்வுக்கு பிறகு அங்கி ருந்து திருச்சி மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ள ஐஏஎஸ் அதி காரி வினித் புறப்பட்டு சென்றார். இந்நிலையில் கிட்னி விற்பனைக்கு ஆதார் உள்ளிட்ட போலி ஆவணங் கள் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்டாதா? அல்லது போலியாக ஆவணங்கள் கொடுத்து ஆவண திருத்தம் செய்யப்பட்டதா? என்ற கோணத்தில் ஆவண சரி பார்ப்பு பணிகள் முதற்கட்ட விசா ரணையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த விசாரணை வளையத்திற்குள் வருவாய்துறையி னரும் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவக் குழுவினரும், திருச்செங் கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி, திருச்செங்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ் ணன், பள்ளிபாளையம் ஆய்வாளர் மலர்விழி உள்ளிட்ட அரசு அதிகாரி கள் பங்கேற்றனர்.