tamilnadu

img

ஜூலை 9 வேலை நிறுத்தம்: அனைத்து

ஜூலை 9 வேலை நிறுத்தம்: அனைத்து ஜூலை 9 வேலை நிறுத்தம்: அனைத்து 

ஈரோடு, ஜூலை 5- மத்திய தொழிற்சங்கங்கள் அறை கூவல் விடுத்துள்ள ஜூலை 9 அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட, பிரச்சார இயக்கங் கள், கருத்தரங்குகள் நடைபெற்று வரு கிறது. தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற  வேண்டும். பொதுத்துறை நிறுவனங்க ளின் பங்குகளை விற்காதே, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப் பந்த, அவுட்சோர்சிங் முறையை ஒழிக்க வேண்டும். பெட்ரோல், டீசல், கேஸ் விலை, ஜிஎஸ்டி வரி மற்றும் சுங்கக்கட்ட ணத்தைக் குறைத்திட வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி யும், ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து ஜூலை 9ஆம் தேதி நாடு தழுவிய வேலை  நிறுத்தம் நடைபெறுகிறது. இதை வெற் றிகரமாக்கும் வகையில் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. இதன்ஒருபகுதியாக ஈரோடு மாநக ரில் வெள்ளியன்று அனைத்து தொழிற் சங்கம் சார்பில் பிரச்சாரம் நடை பெற்றது. சிஐடியு மாவட்டத் தலை வர் எஸ்.சுப்ரமணியன் பிரச்சார இயக் கத்திற்கு தலைமை ஏற்றார். காளை மாட்டு வீரன் சிலை அருகே தொடங்கி  மரப்பாலம், எஸ் கே சி நால் ரோடு, பூசாரி வீதி, அரசு தலைமை மருத்துவ மனை, டீச்சர்ஸ் காலனி, பழைய பாளை யம் பிரிவு, சூரம்பட்டி வலசு, சூரம்பட்டி  இரண்டாம் நம்பர் பஸ் ஸ்டாப் ஆகிய இடங்களில் மக்கள் மத்தியில் பிரச்சாரம்  செய்யப்பட்டது. இதில் சிஐடியு மாவட் டச் செயலாளர் எச்.ஸ்ரீராம், மாவட்ட துணைத்தலைவர் ஆர்.ரகுராமன் உள் ளிட்ட மத்திய தொழிற்சங்க நிர்வாகி கள் பங்கேற்றனர். கோவை இதேபோன்று, அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்வோம் என்கிற முழக்கத்தை முன் னிறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தின் கோவை மாவட்டக்குழு சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கோவை வடக்கு வட்ட தலைவர் ஆர்.ராமசாமி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் மு.சீனிவாசன் துவக்க வுரையாற்றினார். இதில், அரசு ஊழி யர் சங்க மாவட்டச் தலைவர் ச.ஜெகநா தன், மாவட்டச் செயலாளர் ப. செந்தில் குமார், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் சு.பால கிருஷ்ணன் உள்ளிட்டோர் உரையாற்றி னர். முடிவில், நஞ்சப்பன் நன்றி கூறி னார். தருமபுரி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங் கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார் பில், அகில இந்திய வேலை நிறுத்த  விளக்க வாயிற்கூட்டம் தருமபுரி மின்வா ரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவ லகம் முன்பு சனியன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு எல்பிஎப் திட்டச் செய லாளர் சக்திவேல் தலைமை வகித்தார்.  சிஐடியு மின்ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் பி.ஜீவா, மாவட்டச் செயலாளர் தீ.லெனின் மகேந்திரன், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய  சங்க மாநில துணைப் பொதுச்செயலா ளர் ஆறுமுகம், ஏஐசிசிடியு மாநிலத் தலைவர் சி.முருகன், மாவட்ட நிர்வாகி சிவராமன், ஓய்வுபெற்றோர் நல அமைப் பின் மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தர மூர்த்தி, செயலாளர் ஜி.பி.விஜயன், எல்பிஎப் திட்டத் தலைவர் ரவிச்சந்திரன், பொருளாளர் வெங்கடேசன், சிஐடியு பொருளாளர் திம்மராயன், தமிழ்நாடு எலக்ட்ரிக் சிட்டி ஃபோர்டு மாவட்டப் பொருளாளர் சி.அழகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.