ஜியோ பைபர் வயர் துண்டிக்கப்பட்டு பல நாட்களாக கேட்பாரற்று கிடக்கும் நிலை: கண்டுகொள்ளாத நிர்வாகம்
திருப்பூர், அக். 7 - திருப்பூரில் இணையதள சேவை வழங் கும் ஜியோ நிறுவனத்தின் பைபர் வயர் துண்டிக்கப்பட்டு பல நாட்களாக சரி செய்யப் படாமல் வீதியில் தொங்கிக்கொண்டு கிடந் தது. ஜியோ நிர்வாகம் இதை சரி செய்யா மலும், கண்டு கொள்ளாமலும் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் கூறினர். திருப்பூர் குமார் நகர் பகுதியில் பிவிஜி நகர் நான்காவது வீதியில் ஜியோ பைபர் வயர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு துண்டிக்கப் பட்டு கீழே விழுந்து கிடந்தது. இணைப்புச் சாலையின் நுழைவுப் பகுதியில் இந்த வயர் தொங்கிக் கொண்டிருப்பதால், அந்த வழி யில் செல்லக்கூடியவர்கள் கவனக்குறை வாக அந்த வயர் பகுதியில் தடுமாறி விழக்கூ டிய நிலை உள்ளது. சைக்கிளில் சென்ற சிறு வன் கவனிக்காமல் அந்த வீதியில் திரும்பிய போது ஜியோ பைபர் வயர் தடுத்து கீழே விழுந்தார். பல நாட்களாக இந்த வயர் சரி செய்யப்ப டாத நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த கிருத்திகை வாசன் ஜியோ நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள் ளார். அதற்கு அவர்கள், ஜியோ பைபர் வாடிக் கையாளர்கள் இணைய சேவை துண்டிக் கப்பட்ட தகவல் தெரிவித்தால் தான் அதை சரி செய்ய முடியும் என்று அலட்சியமாக பதில் கூறியதாக தெரிவித்தார். பல நாட்களாக இது போல் இருப்பதால் காவல்துறை ரோந்து வாகனத்தில் வந்த காவ லர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. எனி னும் அதன் பிறகும் யாரும் கவனிக்க வில்லை. ஜியோ பைபர் வயர் மின்கசிவு ஏற்ப டாது என்றாலும், வெளிச்சம் குறைவான நேரத்தில் அப்பகுதியை கடப்போர் அந்த வய லில் சிக்கி தடுமாறி கீழே விடக்கூடிய நிலை உள்ளது. எனவே ஜியோ நிர்வாகம் கண்டு கொள்ளா விட்டாலும், காவல்துறை, மாந கராட்சி நிர்வாகம் தலையிட்டு ஜியோ நிறு வனத்திடம் இந்த பிரச்சனையை சரி செய்ய வலியுறுத்த வேண்டும் என்று பிவிஜி நகர் பகுதி மக்கள் கூறினர்.
