tamilnadu

img

சட்ட சமூக பாதுகாப்பற்ற நிலையில் ஐ.டி. ஊழியர்கள் கோவை கருத்தரங்கில் டாக்டர் ஹேமலதா பேச்சு

கோவை, டிச.22– தகவல் தொடர்புத்துறையில் எதிர் கொள்ளும் சவால்கள் குறித்த சிறப்பு கருத்தரங்கம் கோவையில் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் சிஐடியு அகில இந்திய தலைவர் டாக்டர் கே.ஹேம லதா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.  கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹோட்டல் அக்சயாவில் நடை பெற்ற இக்கருத்தரங்கிற்கு தேசிய ஐடி தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கே.சி.கோபிகுமார் தலைமை தாங்கினார். இக் கருத்தரங்கில் சென்னையில் ஜனவரி மாதம் நடைபெற உள்ள சிஐடியு அகில இந்திய மாநாடு மற்றும் ஜனவரி 8ஆம் தேதியன்று நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டம் வெற்றிபெற வேண்டிய அவசியம் குறித்தும், தகவல் தொடர்புத் துறை தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து சிஐடியு அகில இந் திய தலைவர் டாக்டர் கே.ஹேமலதா சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், அறிவியல் வளர்ச்சிக்கேற்ப ஐடி துறை என்கிற தகவல் தொடர்புத் துறை அபாரமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சேவைத் துறையான இத்துறை ஒரு கட்டத்தில் பெரும் வேலைவாய்ப்பை அளித்தது என்றாலும், இந்தியாவை பொறுத்த வரையில் இத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் எவ்வித சட்ட சமூக பாது காப்புமற்ற நிலையிலேயே உள்ளனர். பணிப்பாதுகாப்பு, பெண் ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள் ளது. தொழிற்சங்க விரோத நடவடிக்கை என்பது தொடர் நிகழ்வாக உள்ளது. குறிப்பாக எந்த நேரத்திலும் இந்த ஊழி யர்கள் பணியில் இருந்து விரட்டப்பட லாம் என்கிற நிலையே ஐடிதுறையை பொறுத்தவரையில் உள்ளது. தகவல் தொடர்புத்துறை எதிர்கொள்ளும் இச் சவால்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்து செல்லவும், இத்துறையில் உள்ள ஊழியர்களை ஒன்று திரட்டு வது என்கிற சிஐடியு தமிழ் மாநில குழு வின் முடிவின் ஒரு பகுதியாக இக்கருத்த ரங்கம் கோவையில் நடைபெறுகிறது எனக் குறிப்பிட்டார். முன்னதாக இக்கருத்தரங்கில் சிஐடியு ஈரோடு மாவட்ட செயலாளர் எச். ஸ்ரீராம், நீலகிரி மாவட்ட செயலாளர் ஆர். ரமேஷ், மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன், ஆர்.வேலுசாமி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு கோவை மாவட்டச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். இதில் ஐடி ஆலோசகர் டி.சுந்தர் உள்ளிட்டோர் உரையாற்றினார். கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான சிஐடியு ஊழி யர்கள் பங்கேற்றனர். நிறைவாக சிஐ டியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே. ரங்கராஜ் நன்றி கூறினார்.

;