ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறைகேடு; ஆய்வு
நாமக்கல், செப்.10- பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறைகேடு நடந்துள்ள தாக கூறப்பட்ட நிலையில், அதிகாரி கள் புதனன்று அதிரடி ஆய்வில் ஈடுபட்ட னர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபு ரிந்து வருபவர் பிரபாகரன். இவர் கடந்த செப்.4 ஆம் தேதி இரவு காரில் வீட்டிற்கு சென்ற நிலையில், அவரை காடச்ச நல்லூர் ஊராட்சி செயலாளர் நந்த குமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கடத்தி சென்று ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டல் விடுத் துள்ளனர். இதனைத்தொடர்ந்து பிரபா கரனின் மனைவி யசோதா காவல் நிலை யத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் தனிப்படை அமைத்து விசாரணை மேற் கொண்டு வந்த நிலையில், தஞ்சாவூர் அருகே பிரபாகரனை மீட்ட போலீசார், அவரை கடத்திய நந்தகுமார் உள்பட 2 பேரை கைது செய்தனர். இந்நிலை யில், காவல் துறையினர் நடத்திய விசா ரணையில், நந்தகுமார் பல்வேறு தக வல்களை கூறியுள்ளார். அதனடிப்படை யில் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாக ரனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து நாமக்கல் திட்ட அலுவலர் புத னன்று உத்தரவிட்டதாக கூறப்படு கிறது. இதைத்தொடர்ந்து, ஊராட்சி ஒன் றிய திட்டப்பணிகளில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளனவா? என்பது குறித்து கண்டறிவதற்காக, ஊரக தணிக்கை மாவட்ட முகமை அலுவலத்திலிருந்து அதிகாரிகள் கொண்ட 10 பேர் கொண்ட குழு புதனன்று ஆய்வு மேற்கொண்ட னர். பள்ளிபாளையம் ஒன்றியத்துக்குட் பட்ட 15 ஊராட்சி பகுதிகளிலும் அதிகாரி கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்ற னர். இந்த ஆய்வு வியாழனன்றும் (இன்று) நடைபெறுமென அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.