குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7850 வழங்க வலியுறுத்தல்
தருமபுரி, ஜூலை 23- குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7850 வழங்க வேண்டும் என ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதி யர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட 3 ஆவது பேரவைக் கூட்டம், தருமபுரி அலுவலக உதவியாளர்கள் சங்க அலுவலகத்தில் செவ்வாயன்று நடை பெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலை வர் கே.கேசவன் தலைமை வகித்தார். மாவட்ட தணைத்தலைவர் என்.ஏ. ரவிச்சந்திரன், வரவேற்றார். மாநில துணைத்தலைவர் கே.ஆர்.அப்பாவு துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எம்.பாபு அறிக்கையை முன்வைத்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.தெய்வானை, அனைத்துத்தறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.பெருமாள் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இக்கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊழியர்கள் பணி ஓய்வு பெறும்போது ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் குற்றச் சாட்டுகள் ஏற்படுத்தி, விசா ரணை என்ற பெயரில் அலைகழிக்கக் கூடாது. ஓய்வூதிய பணப்பயன்கள் அனைத்தும் விரைந்து வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் மாவட்டத் தலைவராக கே.கேசவன், செயலாளராக நந்தகோபால், பொரு ளாளராக குணசேகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலச் செய லாளர் பி.மோகன்ராஜ் நிறைவுரை யாற்றினார்.